இயக்குநர் மணிரத்னம், அனுராக் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத்துரோக வழக்கு..!

நாட்டில் சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது உள்ளிட்ட சில பிரச்னைகள் குறித்து பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அரசை விமர்சிப்பதால் மட்டும் ஒருவர் தேசதுரோகி, அர்பன் நக்சல் என முத்திரைக் குத்தப்படுவதை ஏற்க முடியாது. நாட்டின் ஒரு குடுமகன் கூட உயிர் பயத்தில் தனது சொந்த நாட்டிலேயே வாழும் நிலை கூடாது” என்று நாட்டின் 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதினர்.
இயக்குநர் மணிரத்னம், அனுராக் காஷ்யப், கொங்கனா சென், அபர்ணா சென், ராமச்சந்திர குஹா உள்ளிட்ட 49 பிரபலங்கள் கடிதம் எழுதிய காரணத்துக்காக அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இக்கடிதத்தைக் கடந்த ஜூலை மாதம் பிரதமருக்கு அனுப்பப்பட்டது.
இஸ்லாமிய மக்கள், சிறுபான்மை மக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் ஜெய் ஸ்ரீ ராம் என்ற முழக்கத்தோடு நடத்தப்படும் வன்முறைச் சம்பவங்களை நிறுத்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *