பெரியார் திடலில் சிறப்புப் புத்தகக் காட்சி

லக புத்தகத் தினத்தை (23/04/2019) முன்னிட்டு சென்னை பெரியார் திடலில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் சிறப்புப் புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. சென்னை புத்தக சங்கமம் என்ற பெயரில் தொடர்ந்து ஏழாம் ஆண்டாக நடைபெற்று வரும் இந்த கண்காட்சியில்  30 பதிப்பகங்கள் கலந்து கொண்டுள்ளன. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து புத்தகங்களும் 50 விழுக்காடு கழிவு என்பது மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். கண்காட்சியை ஒட்டி குறும்பட ஒளிபரப்பும், சிறப்பு கருத்தரங்கமும் நடத்தப்படுவது பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

குளிரூட்டப்பட்ட அரங்கில் (A/C Hall) நடைபெற்று வரும் இந்த கண்காட்சிக்கு வருவோருக்கு நுழைவுக் கட்டணம் இல்லை என்பதும் 50 விழுக்காடு தள்ளுபடி விலையில் அனைத்து புத்தகங்களும் கிடைக்கும் என்பதும வாசகர்களை கவரக்கூடிய விடயங்களாக இருக்கிறது. அத்தோடு புத்தகர் விருது வழங்கும் விழா, புத்தகக் கொடைஞர் திட்டம், குழந்தைகள் – மாணவர்களுக்கான போட்டிகள், பல்வேறு சிறப்பு உணவு அரங்குகள் மற்றும் புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் பார்வையாளர்களுக்கு, பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோருக்கு சிறப்பு பரிசுகள் என்று பாராட்டத்தக்க வகையில் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.

கடந்த 20-ஆம் தேதி தொடங்கி அய்ந்து நாட்கள் என்றளவில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புத்தகக் கண்காட்சி நாளை (24/04/2019) இரவு 9.00 மணியோடு நிறைவடைகிறது. புத்தக விரும்பிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை அள்ளிச் செல்லும் அரிய வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *