சேகர் (ரெட்டி) மீது தொடர்ந்த வழக்கை திரும்பப் பெற்ற சிபிஐ

2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்ட விவகாரத்தில் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டு வழக்குகளை சந்தித்து வந்த சேகர் (ரெட்டி) மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு சென்னையில் உள்ள தொழில் அதிபர் சேகர் (ரெட்டி) வீட்டில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் அவருடைய வீட்டில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் கோடிக்கணக்கில் கைப்பற்றப்பட்டது.

சேகர் (ரெட்டி) வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரது வீட்டில் இருந்து பெட்டி பெட்டியாக கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து சேகர் (ரெட்டி) மற்றும் அவருடைய நண்பர்கள் கைது செய்யப்பட்டனர்.

இந்தப் புகார் தொடர்பாக சேகர் (ரெட்டி) மற்றும் அவருடைய நண்பர்கள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. 24 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாகவும், சட்டவிரோதமாக லாபம் அடைந்ததாகவும் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் சேகர் (ரெட்டி) உள்பட 6 பேர் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் மற்றும் சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்பதால் அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சிபிஐ மனுத் தாக்கல் செய்தது.

இதை ஏற்றுக்கொண்ட சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஜவஹர், சேகர் (ரெட்டி) உள்பட 6 பேர் மீதான வழக்கு ரத்து செய்து உத்தரவிட்டார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *