தந்தை பெரியார் நினைவு நாள் விருது வழங்கல் மற்றும் புத்தகங்கள் வெளியீட்டு விழா..

தந்தை பெரியாரின் 46வது நினைவு நாளை முன்னிட்டு செவ்வாய்கிழாமை அன்று (24 .12 .2019) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம் ஆர் ராதா மன்றத்தில் பெரியார் விருது வழங்கும் விழா மற்றும் புத்தகங்கள் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாற்கு திராவிடர் கழகத் தலைவர் கி வீரமணி தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியில் தந்தை பெரியார், கி. வீரமணி நூல்களின், மலையாள மொழியாக்க நூல்கள் வெளியிடப்பட்டன. மலையாள மொழியில் மொழியாக்கம் செய்து புத்தகங்களை எழுதிய லால்சலாம் அவர்களை பாராட்டி கி.வீரமணி சிறப்பு செய்தார். மலையாளத்தில் மொழியாக்கம் செய்யப்பட்ட எட்டு நூல்களை கி.வீரமணி வெளியிட, பெரியார் பன்னாட்டு அமைப்பு இயக்குனர் மருத்துவர் சோம. இளங்கோவன் பெற்றுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து புலவர் பா.வீரமணியால் தொகுக்கப்பட்ட தந்தை பெரியார் பொதுவுடமை சிந்தனைகள் என்ற தலைப்பில் மூன்று தொகுதி கொண்ட புத்தகங்கள் வெளியிடப்பட்டது. அப்புத்தகங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன் வெளியிட, முனைவர் மு. நாகநாதன் பெற்றுக்கொண்டார். அந்த 3 தொகுதி நூல்களின் நன்கொடை மதிப்பு ரூபாய் 750 நிகழ்ச்சியில் சிறப்பு தள்ளுபடியாக ரூபாய் 600க்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பெரியார் பன்னாட்டு அமைப்பின் இயக்குனர் மருத்துவர் சோம இளங்கோவன், புதுக்கோட்டை மருத்துவர் நா. ஜெயராமன், ஆகிய மூவருக்கும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பெரியார் விருது அளித்து சிறப்பு செய்து சிறப்புரையாற்றினார். முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் இரா முத்தரசன், முனைவர் மு. நாகநாதன், திருமுருகன் காந்தி, புலவர் பா. வீரமணி, மருத்துவர் சோம. இளங்கோவன், மருத்துவர் நா. ஜெயராமன் ஆகியோரும் உரையாற்றினார்கள்.

“தமிழ்நாட்டைப் பொருத்தவரை ராமன் கிருஷ்ணன் சமாச்சாரங்கள் பலிக்காது இராமனை தந்தை பெரியார் போல் தோலுரித்துக் காட்டியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது. வடக்கே வேண்டுமானால் பிஜேபி வகையறாக்களின் ஜம்பம் பலிக்கலாம். இப்பொழுது வடக்கேயும் தந்தை பெரியார் பயணிக்க ஆரம்பித்துவிட்டார். பெரியார் ஓர் அறிவாயுதம் பெரியார் அறிவு விருந்தாகவும் இருந்தார். இப்பொழுது நோய் தீர்க்கும் மருந்தாகவும் ஆகியிருக்கிறார். நாங்கள் எடுக்கவேண்டிய ஆயுதத்தை எதிரிகள் தீர்மானிக்கிறார்கள். எங்களிடம் இருக்கும் அறிவாயுதம் தந்தை பெரியாரே…” என்று உரையாற்றினார் தி.க. தலைவர் கி வீரமணி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தனது உரையில், “இன்று தந்தை பெரியாரின் நினைவு நாள் இன்று இந்திய அளவில் முதனிலை செய்தியாக இருப்பது தந்தை பெரியாரே. தந்தை பெரியாரை புறந்தள்ளி இங்கு எவரும் கட்சி நடத்த முடியாது; வெற்றி பெறவும் முடியாது.

தந்தை பெரியாரைப் பற்றி பிஜேபியின் தரக்குறைவான பதிவினை அதன் கூட்டணி கட்சிகள் கண்டித்துள்ளன. அவர்களுக்கு நன்றி. கண்டித்ததோடு மட்டும் போதாது, அந்த கூட்டணியிலிருந்து இருந்தும் வெளியேற வேண்டும். தந்தை பெரியார் கருத்தும் மார்க்கஸ் கருத்தும் அளிக்கவே முடியாதவை. காரணம் அவை மக்களை சார்ந்தவை. தோழர் திருமுருகன் காந்திக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் பெரியார் விருது அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும் திருமுருகன் காந்திக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்..? எந்த கொள்கைப் பலம் இருக்கிறது..? எதைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளட்டும். பெரியார் சிலைக்கு திருமுருகன் காந்தி மாலை அணிவித்து கூட்ட கூடக் குற்றமாம். அதன் மீதும் ஒரு வழக்கு. இப்படி 40 வழக்குகளை போட்டி இருக்கிறது தமிழக அரசு. அவர் தனி மனிதர் அல்ல அவருக்குப்பின் பலமாக நாங்கள் இருக்கிறோம்” என்று குறிப்பிட்டார் முத்தரசன்.

மேனாள் தட்டக் குழு துணைத் தலைவர் முனைவர் மு.நாகநாதன் தான் உரையில் குறிப்பிட்டதாவது, “இந்தியா சூழலில் ஜாதிக்கு முக்கியமான இடம் உண்டு. பொதுவுடமை மலர்வதற்கு பெரும் தடையாக உள்ளது. இதனை தந்தை பெரியார் முன்னெடுத்தார். ஒரு கட்டத்தில் இதில் சற்று தயக்கம் காட்டியது கம்யூனிஸ்ட் கட்சி. இப்பொழுது அந்த நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டு இருப்பது நல்ல திருப்பம். தமிழ்நாட்டில் பிற்போக்கு சக்திகள் காலுன்ற முடியாமைக்கு காரணம் தந்தை பெரியார் கருத்துக்கள் இங்கு ஆழமாக பதிந்திருப்பது தான்“ என்றும் குறிப்பிட்டார்.

பெரியார் விருது பெற்றவர்களில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தனது ஏற்புரையில், “என்மீது 39 வழக்குகாள் உள்ளன. இந்த வழக்குகளுக்கான விருதே இது. நான் இதுவரை செய்த பணிகளுக்காக அல்ல; செய்யவிருக்கும் பணிகளுக்கான அங்கீகாரமாக இதனைக் கருதுகிறேன். இது தனிமனிதனான எனக்கு மட்டும் கொடுக்கப்பட்ட விருதாக நான் கருதவில்லை. எனது தோழர்கள் அருள் முருகன், லெனாகுமார், புருசோத்தமன், பிரவீன்குமார், செந்தில்குமார் ஆகியோர்களுக்கும் சேர்த்து கொடுக்கப்பட்ட விருதாகவே கருதுகிறேன். இந்துத்துவ சக்திகளின் கடும் எதிரியாக கருதப்படும் ஆசிரியர் அவர்களால் இந்த விருதை பெறுவதுதான் முக்கியமானது. இது ஒரு நெருக்கடியான காலகட்டம். வேறு எந்த காலகட்டத்தை விட தந்தை பெரியார் மிகவும் அதிக தேவைப்படும் காலகட்டம் இது. பெரியாரின் சிந்தனைகள் தான் நமக்கு கிடைத்த பெரிய ஆயுதம். தந்தை பெரியார் என்னும் புரட்சிப் பேராயுதம் இந்தியாவிற்கே தேவைப்படுகிறது. இப்படித்தான் தந்தை பெரியாரைப் பார்க்கிறோம். பிராக்டிகல் மாக்சியம்தான் தந்தை பெரியாரின் தத்துவம்” என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *