தமிழகம் முழுவதும் 470 மீனவர்களுக்கு மானிய விலையில் சாட்டிலைட் போன்

தமிழகம் முழுவதும் 470 மீனவர்களுக்கு மானிய விலையில் சாட்டிலைட் போன் கள் வழங்கப்பட்டுள்ளதாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

விசைப் படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு செல்லும் மீனவர்கள் பல நாட்கள் கடலில் தங்கி இருந்து மீன் பிடிக்கும் தொழிலில் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு வானிலையில் மாற்றம் நிகழ்ந்து பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க எந்த தொலைத்தொடர்பு சாதனங்களும் இல்லாமல் இருந்தது. இதற்கு தீர்வு காணும் வகையில் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் மீனவர்களுக்கு சாட்டிலைட் போன் பில் வழங்கும் பணி கடந்த ஆண்டு தொடங்கியது. இதுவரை 470 சாட்டிலைட் போன் கள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இது தொடர்பாக மீன்வளத் துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ” சாட்டிலைட் போன் கள் மீனவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது கடலில் சாதாரண போன்களில் சிக்னல்கள் கிடைக்காது என்பதால் இப்போது வழங்கப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் 470 சாட்டிலைட் போன்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த போனின் விலை 1 லட்சம் ரூபாயாகும். இவற்றில் 75 விழுக்காடு மத்திய-மாநில அரசுகள் மானியமாக வழங்குகிறது. மீனவர்கள் தரப்பில் 25 விழுக்காடு வழங்க வேண்டும்.

ஆரம்ப காலத்தில் கரையில் இருப்பவர்களை தொடர்புகொள்ள பயன்படும் என்பதால், கடலுக்கு செல்லும் மீனவர்கள் சேட்டிலைட் போன்களை வாங்கும்படி அறிவுறுத்தி வருகிறோம்.” இவ்வாறு அந்த அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *