பயிர்காப்பீட்டு தொகை முறைகேடுகளை அம்பலப்படுத்திய சிபிஐ கட்சியனர் தாக்கப்பட்டனர்

இளையான்குடி முன்னாள் CPIM தாலுகா செயலாளர் மற்றும் தற்போதய விதொச இளையான்குடி தாலுகா செயலாளர் தோழர் உ. லட்சுமணன் மற்றும் தோழர் காத்தமுத்து ஆகிய இருவரையும் சிவகங்கை மாவட்டத்தில் பயிர்காப்பீட்டுதொகை முறைகேடுகளை அம்பலப்படுத்தி நடவடிக்கை மேற்கொண்டதன் பின்னணியில் இன்று 10.5.2019 மாலை 7.00மணியளவில் இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் ஆயுதம் கொண்டு கொலைவெறி தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இருவரும் தற்போது இளையான்குடி மருத்துவ மனையில் உள்ளனர். இளையான்குடி அரசு மருத்துவமனையில் மற்றும் சிவகங்கை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *