பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கு ; முக்கிய குற்றவாளிகளை காப்பாற்ற அதிமுக தீவிரம் – கனிமொழி எம்பி

பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் அதிமுகவைச் சேர்ந்த மேலும் பல முக்கிய புள்ளிகளை காப்பாற்ற அதிமுக அரசு தீவிர முயற்சி செய்வதாக கனிமொழி எம்பி குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தையே உரையைச் செய்த பொள்ளாச்சி பாலியல் வன்முறை வழக்கில் அதிமுகவை சேர்ந்த பல முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கலாம் என்றும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் திமுக சார்பில் பொள்ளாச்சி காந்தி சிலை அருகே நேற்று (10-01-2021) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுகவினர் மட்டுமின்றி அதன் கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ் கம்யூனிஸ்ட் கட்சி மதிமுக விடுதலை சிறுத்தைகள் கொங்கு மக்கள் தேசிய கட்சி ஆதித்தமிழர் பேரவை மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சியை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட கனிமொழி எம்பி பேசும்போது, “பொள்ளாச்சி பாலியல் வழக்கில் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் மேலும் துரிதப்படுத்தி உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு கட்டமாக நடக்கும் ஆர்ப்பாட்டத்தை தடுக்க ஆளும் கட்சியும் முயற்சி செய்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான கொடுமை இந்த ஆட்சியில் தொடர்ந்து கொண்டிருக்கிறது இந்த பாலியல் வழக்கில் தொடர்புடைய அதிமுகவினர் பலரை காப்பாற்ற அரசு நினைக்கிறது உண்மை குற்றவாளிகளை விரைந்து சிபிஐ கைது செய்ய வேண்டும்.

இந்த வழக்கை கண்டு கொள்ளாமல் விட்டு விட்டால் தமிழகத்தில் இன்னும் பல பெண்கள் பாதிக்கப்படுவார்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நியாயம் கிடைக்க திமுக தலைவர் மு க ஸ்டாலின் அதற்காக வழிவகுத்து கொண்டிருக்கிறார் பெண்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை தனது கட்சிக்காரர்களை முக்கியம் என்று அவர்களை அதிமுக அரசு காப்பாற்றிக் கொண்டிருக்கிறது.

உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும் வரை திமுக ஒருபோதும் ஓயாது விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் அப்போது பாலியல் சம்பவங்களில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றம் முன் நிறுத்தப்படுவார்கள்”.

இவ்வாறு கனிமொழி எம்பி தனது உரையில் குறிப்பிட்டார்.

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *