மனைவிக்காக அரசு ஊழியர்களின் வங்கி கணக்குகளை மாற்றிய பட்னாவிஸ்

காராஷ்டிராவின் முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் 2 லட்சம் அரசு ஊழியர்களின் வங்கி கணக்குகளை, தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கிக்கு மாற்றிய விவரம் தெரியவந்துள்ளது.

ஆக்ஸிஸ் வங்கியின் துணைத் தலைவராக இருந்தவர் தேவேந்திர பட்னாவிஸின் மனைவி அம்ருதா. அவருடைய வளர்ச்சிக்காக மராட்டிய அரசு ஊழியர்களின் வங்கி கணக்குகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் இருந்து, தனியார் வங்கியான ஆக்சிஸ் வங்கி மாற்றியுள்ளார் பட்னாவிஸ். இதன் மூலம் ஆண்டுதோறும் பதினோராயிரம் கோடி ரூபாய் ஆக்சிஸ் வங்கி அரசு பணத்தின் மூலம் பரிவர்த்தனை நடைபெற்றுள்ள தகவல் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் அமலாக்க துறையில் புகார் அளித்திருந்தார். பட்னாவிஸ் தனது மனைவிக்காகவே தனியார் வங்கிக்கு அரசு ஊழியர்களின் வங்கி கணக்குகளை மாற்றியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில் தற்போதைய மகாராஷ்டிரா நிதி அமைச்சர் ஜெயந்த் பாட்டில் இது உண்மைதான் என்றும், மீண்டும் அந்த வங்கி கணக்குகள் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு மாற்றுவதற்கான ஆலோசனை நடந்து வருவதாக கூறியுள்ளார். இந்த விவகாரம் முதலமைச்சர் உத்தவ் தாக்கரேயின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி தனியாருக்கு சாதகமாக செயல்பட்ட தேவேந்திர பட்னாவிஸ் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்வியும் எதிர்க்கட்சியில் இடையே எழுந்து உள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *