சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரச்சனை: முன்னாள் அதிமுக எம்எல்ஏ மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு

நாகர்கோவிலில் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் 2011 முதல் 2016 வரை எம்எல்ஏவாக இருந்தவர் அதிமுகவைச் சேர்ந்த நாஞ்சில் முருகேசன். இவர் மீண்டும அதே தொகுதியில் கடந்த சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

அதிமுகவில் பல மாநில பொறுப்புகளையும் வகித்த அவர், இரண்டு தினங்களுக்கு முன் கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில் நாகர்கோவில் கோட்டறை சேர்ந்த 15 வயதான 10-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நாஞ்சில் முருகேசன் மீது நேற்று நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மாணவியின் தந்தை அளித்த புகாரில், தனது மகளை அப்பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கடத்திச் சென்றுவிட்டதாகக் கூறியிருந்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தேடிவந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு மாணவியையும், அவரை சென்ற வாலிபரையும் மீட்டனர். பின்னர் இளைஞர் மீது வழக்குப் பதிவு  செய்தனர்.இந்நிலையில் சிறுமியை விசாரணை செய்ய குமரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

அவர்களது விசாரணையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிறுமியின் தாயார் முன்னாள் எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் இடம் ஏற்பட்ட தொடர்பின் காரணமாக தனது மகளையும் அழைத்து சென்றதாகவும் அங்கு சிறுமிக்கு நாஞ்சில் முருகேசன் பாலியல் தொல்லை கொடுத்து துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதேபோன்று நாகர்கோவில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த மேலும் சிலர் பாலியல் தொல்லை அளித்த துன்புறுத்தியதாகவும் வாக்குமூலம் அளித்ததின் பேரில் இதுகுறித்து நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரி புகார் அளித்தார்.

அவர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டம் உள்பட 6 பிரிவுகளில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ நாஞ்சில் முருகேசன் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

வழக்குப் பதிவு செய்யப்பட்ட சில நிமிட நேரங்களிலேயே நாஞ்சில் முருகேசன் தலைமை தாங்கினார் தலைமறைவாகினர் இந்நிலையில் அவரை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

10ம் வகுப்பு மாணவியை பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *