150 நாடுகளுக்கு மருத்துவ உதவி : ஐநாவின் உயர்நிலைக் கூட்டத்தில் மோடி உரை

ஐநாவின் உயர்நிலைக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார் அவர் ஆற்றிய உரையில், “இந்தியாவில் சுகாதாரத்துறை சிறப்பாக செயல்படுவதால் குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது நெகிழி பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எங்கள் அரசு எடுத்துள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் 40 கோடி வங்கி கணக்குகளை தொடங்கி வைத்துள்ளோம் அதில் 22 கோடி பெண்கள் அடங்குவர் குடிமக்கள் அனைவருக்கும் வீடு கட்டித்தரும் திட்டத்தை 2022க்குள் நிறைவேற்ற எங்கள் அரசு உறுதி பூண்டுள்ளது.

இந்தியாவின் சுகாதார முறைகள் பிற உலக நாடுகளில் இருப்பதைவிட சிறப்பாக உள்ளது கொரோனாவுக்கு எதிரான திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றி இருக்கிறோம் அமைதி மற்றும் நிலையான வளர்ச்சி பாதை மீது இந்தியா ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமைதியை நிலைநாட்ட ஐநாவின் சிறப்பு தோன்றியது தற்போது கருணாவுக்கு எதிரான போருக்காக ஐநா சீர்திருத்தம் உங்களுடன் மறுபிறப்பு எடுத்தது கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருத்துவம் மற்றும் பிற உதவிகளை வழங்கி வருகிறோம்.

முக்கியமான தருணத்தில் ஐநா பாதுகாப்பு அவையில் இந்தியா இடம் பிடித்திருக்கிறது 6 லட்சம் கிராமங்களில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தி 11 கோடி வீடுகளுக்கு கழிவறை கட்டிக் கொடுத்து உள்ளோம்.

இந்தியாவின் வாழ்வாதார திட்டங்களில் சுய உதவி குழுக்களை சேர்ந்த ஏழு கோடி பெண்கள் கரம் கொடுத்துள்ளனர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் மூலம் பலரது வாழ்க்கையில் மிகப் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

மாநில அரசுகளில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள் முக்கிய பிரதிநிதிகள் அங்கம் வகித்து நாட்டின் வளர்ச்சிக்கு கை கொடுத்து உள்ளனர் உலக அளவில் உறவில் இருந்து மீளும் நாடுகளில் இந்தியா முன்னேறி வருகிறது.”

இவ்வாறு பிரதமர் மோடி ஐநாவின் உயர்நிலைக் கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *