21-ம் தேதி முதல் பொது போக்குவரத்து அனுமதிக்க வாய்ப்பு; அரசு பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி தீவிரம்: பராமரிப்பு பணியும் முழு வீச்சில் நடைபெறுகிறது


தமிழகத்தில் முழு ஊரடங்கு தளர்வுகளில் பொது போக்கு வரத்துக்கு வரும் 21-ம் தேதி முதல் அனுமதி வழங்கப்படும் என்பதால் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பணிமனைகளில் அரசுப் பேருந்துகளை சுத்தம் செய்து பராமரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
கரோனா தொற்று பரவலை தடுக்க தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் பொது போக்குவரத்துக்கு கடந்த மாதம் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், ஆட்டோ, வாடகை கார்கள் போன்ற வாகனங்கள் இயங்கவும் அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், கரோனா தொற்று பரவல் குறைந்து வருவ தால், முழு ஊரடங்கில்தளர்வுகள் அளிக்கப் படுகின்றன. ஆட்டோ மற்றும் வாடகை கார்களில் குறைந்த எண்ணிக்கை யில் பயணிகளை அழைத்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டது. இதனால், கடந்த 6 நாட்களாக ஆட்டோ, வாடகை கார்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை போக்கு வரத்துத் துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் சந்தித்து, பேருந்து களை இயக்குவது தொடர்பாக ஆலோசனை நடத்தியுள்ளார். இதனால், வரும் 21-ம் தேதி கட்டுப் பாடுகளுடன் பொது போக்கு வரத்துக்கு அனுமதி வழங்குவது உறுதியாகி உள்ளது. மாவட்டத் துக்கு உள்ளே அல்லது மண்டல அளவில் அரசு மற்றும் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதையடுத்து, பணிமனைகளில் கடந்த ஒன்றரை மாதங்களாக நிறுத்தி வைக்கப் பட்டுள்ள அரசுப் பேருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க அரசுப் போக்குவரத்துக் கழகங் களின் மேலாண் இயக்குநர்கள் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, திருவண்ணாமலை மண்டல அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு உட்பட்ட 10 பணி மனைகளில் நிறுத்தி வைக்கப்பட் டுள்ள 500-க்கும் மேற்பட்ட அரசுப் பேருந்துகளை சுத்தம் செய்யும் பணி கடந்த 2 நாட்களாக நடை பெறுகிறது. ஒவ்வொரு அரசுப் பேருந்திலும் முகப்பு விளக்குகள், சக்கரங்கள், எஞ்ஜின், பிரேக், ஆக்சி லேட்டர் மற்றும் இயந்திரவியல் தொடர்பான அனைத்து பாகங்க ளும் சரியாக செயல்படுகிறதா? என தொழில்நுட்பவியலாளர்கள் மூலம் சரி பார்க்கப்படுகிறது.
இது குறித்து போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் கூறும் போது, “வரும் 21-ம் தேதி முதல் பொதுப் போக்குவரத்துக்கு அனுமதி கிடைக்கலாம் என்பதால், பேருந்துகளை சுத்தம் செய்து வருகிறோம்” என்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *