ஆரோக்கிய சேது ஆப் எப்படி, யாரால் உருவானது என்று தெரியாது? – அதிர்ச்சி கொடுக்கும் மத்திய பாஜக அரசு

கொரோனா தொற்று பரவலை கண்காணிக்க மத்திய அரசு ஆரோக்கிய சேது என்ற தனியார் நிறுவன செயலியை கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகம் செய்தது. இந்த செயலியை பிரதமர் மோடி பரிந்துரை செய்தார்.

ஆரோக்கிய சேது செயலி குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள சவுரவ் தாஸ் என்ற சமூக செயற்பாட்டாளர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல கேள்விகளை எழுப்பியிருந்தார்.

அவரின் கேள்விகளுக்கு இரண்டு மாதங்களுக்கு மேலாகியும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பதிலே கிடைக்காமலிருந்து வந்தது. முதலில் தேசிய தகவல் மையம் இந்த செயலி குறித்த தகவல்கள் எங்களிடம் இல்லை எனக் கூறியது.

பின்னர் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் இந்த விடயத்தைத் தேசிய மின் நிர்வாக பிரிவுக்கு மாற்றிவிட்டது. ஆனால், தேசிய மின் நிர்வாகப் பிரிவும் இந்தத் தகவல்கள் எங்களுக்குச் சம்பந்தமில்லாதவை என்று பதிலளித்திருக்கிறது.

இந்நிலையில் ஆரோக்கிய சேது செயலிக்கான இணையதளத்தில் தேசிய தகவல் மையம் உருவாக்கிய செயலி இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தேசிய தகவல் மையம் மற்றும் மத்திய மின்னணு அமைச்சகம் (National Informatics Centre and Information Technology ministry) என யாரிடமும் இந்தச் செயலி குறித்த தகவல்கள் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

-இதையடுத்து ஆரோக்கிய சேது இணையதளம் gov.in என்ற டொமைன் பெயருடன் எவ்வாறு உருவாக்கப்பட்டது என்பது குறித்து எழுத்துப்பூர்வமாக விளக்குமாறு தேசிய தகவல் மையத்திடம் கேட்டுக் கொண்டது மத்திய தகவல் ஆணையம் (Central Information Commission).

தற்போது இந்தக் கேள்விக்கு ஆரோக்கிய சேது செயலியை உருவாக்கியது யார் என்று தெரியவில்லை எனப் பதிலளித்துள்ளது மத்திய மின்னணு அமைச்சகம்.

இதையடுத்து ஆரோக்யா சேது செயலி குறித்து எந்த தகவலும் இல்லை என்பதை எப்படி என விளக்கம் அளிக்குமாறு தேசிய தகவல் மய்யத்துக்கு மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டதோடு அடுத்த மாதம் நேரில் ஆஜராகவும் கூறியுள்ளது.

இந்த செயலியை பிரதமர் மோடி விளம்பரப்படுத்திய போது பல்வேறு அரசுத் துறை, பொதுத்துறை மற்றும் தனியார் ஊழியர்கள் இந்த செயலியை தரவிறக்கம் செய்யவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் தரவிறக்கம் செய்துள்ளனர்.

இந்த ஆரோக்ய சேது செயலி பயன்படுத்துவதற்க தேவையான தகவல்களை விட அதிகமான தகவல்களை பயனாளர்களிடம் இருந்து பெறுகிறது என நிபுணர்கள் ஏற்கனவே குற்றச்சாட்டு எழுப்பியிருந்தனர்.

இதனால் ஆரோக்ய சேது செயலி நம்பகத்தன்மை குறித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக செய்ற்பாட்டளார்களும், அறிஞர்களும் கேள்வி எழுப்பியிருந்தனர்.  தற்போது அந்த சந்தேகங்களுக்கு வலுச்சேர்க்கும் விதமாக “ஆரோக்யா சேது” குறித்த மத்திய பாஜக அரசின் பதில்கள் பெரும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *