பாஜகவில் சேருவதாக சொல்வது என் காமெடியை விட மிகப் பெரிய காமெடி – கலாய்த்த சந்தானம்

பாஜகவில் நடிகர் சந்தானம் இணைய போவதாக வெளியான செய்தி குறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

தமிழகத்தில் பாஜகவில் இணையும் நடிகர்களின் எண்ணிக்கை சமீப காலங்களாக அதிகரித்துள்ளது. நடிகர்கள் மட்டுமல்லாது சில பிரபலங்களும் தொடர்ந்து பாஜகவில் இணைந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த வரிசையில் நடிகர் சந்தானம் பாஜகவில் இணைய போவதாக சமூகவலைதளங்களில் வதந்தி பரப்பப்பட்டது.

இதுகுறித்து நடிகர் சந்தானம் விளக்கம் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், தான் பாஜகவில் இணையப் போவதாக வந்த செய்தி வதந்தி என்றும், தான் நடித்து வெளியாகியுள்ள பிஸ்கோத்து படத்தில் வரக்கூடிய காமெடியை விட பெரிய காமெடி இதுதான் என்றும் நான் பாஜகவில் இணைய போவதாக வருவது வதந்திதான். மக்கள் அதனை சிரித்துவிட்டுப் போகட்டும் என தனக்கே உரிய பாணியில் கலாய்த்த படி சென்றார் சந்தானம்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *