நடிகர் விவேக் மரணம்: அரசியல் தலைவர்கள் இரங்கல்

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று முன் தினம் வடபழனி எய்ம்ஸ் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று அதிகாலை மரணமடைந்தார். இவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வீரமணி, திராவிடர் கழகம்

பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, அரசு பணியில் இருந்தபடி கலைத்துறையில் நுழைந்து, பின்னர் திரை துறையில் பெரு வெற்றி பெற்ற நடிகர் விவேக், சமூக சீர்திருத்த கருத்துகளை தன் படங்களில் வெளிப்படுத்தி, அதையே தன் அடையாளமாகவும் மாற்றிக்கொண்டவர். 59 ஆண்டுக்குள் அவருடைய மறைவு தமிழ் திரையுலகத்திற்கு மட்டுமல்ல, தமிழ் சமூகத்திற்கே பேரிழப்பாகும்.

மு.க. ஸ்டாலின், திமுக தலைவர்

           “சின்ன கலைவாணர் என திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவை கலைஞர் மறைவு செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது. பல்கலை வித்தகராக விளங்கிய விவேக், தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர். கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சுழலியல் சார்ந்த சமூக பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திகொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்து கொண்டதோ? அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர், அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்”.  என தனது இரங்கள் செய்தியை தெரிவித்திருந்தார்.

பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

          திரைப்படங்கள்  மூலம் மக்களுக்கு பல அரிய முற்போக்கு சிந்தனையான கருத்துகளை, நகைச்சுவை  மூலம் வழங்கி வந்த நடிகர் விவேக் மரணம் அனைவரையும் அதிர்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது. தன்னுடைய நகைச்சுவை நடிப்பு மூலம் மக்களின் மனங்களைக் கவர்ந்தவர்.  அவருடைய மறைவு திரைப்படத்துறைக்கு மட்டுமல்லாமல், தமிழ் சமூகத்துக்கு  மிகப்பெரிய இழப்பாகும்.

முத்தரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனுக்கு பின்னர் மூட நம்பிக்கை எதிர்ப்புக்கும், அறிவியல் மற்றும் பகுத்தறிவு சிந்தனைக்கு வெள்ளித்திரையை ‘லாவகமாக’ பயன்படுத்திய முன்னுதாரண கலைஞர்.

 

எடப்பாடி பழனிசாமி, தமிழக முதல்வர்

 “தமிழ் திரையுலகினராலும், திரைப்பட ரசிகர்களாலும் சின்ன கலைவாணர் என அழைக்கப்படுபவரும், தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற நடிகருமான விவேக் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன். தனது சொந்த வாழ்க்கையிலும் சமூக நலனை குறிக்கோளாக கொண்டு வாழ்ந்த சமூக ஆர்வலர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். தமிழிசை சவுந்தரராஜன் (தெலங்கானா, புதுச்சேரி ஆளுநர்): சிறந்த  சுற்றுச்சூழல் ஆர்வலராக பல லட்சம் மரக்கன்றுகளை நட்டு வைத்து இயற்கை  வளங்களை பாதுகாத்துள்ளார். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும்,  ரசிகர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவிக்கிறேன்”.

ராமதாஸ் , பாட்டாளி மக்கள் கட்சி

மூட நம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளையும், சமூக விழிப்புணர்வுக்கான கருத்துகளையும் தமது வசனங்கள் மூலம் பரப்பியவர். கே.எஸ்.அழகிரி (தமிழக காங்கிரஸ் தலைவர்): நம்மையெல்லாம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டு பிரிந்து விட்டார். அவரது குடும்பத்தினருக்கும், திரைப்படத்துறையினருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். வைகோ (மதிமுக):  பாலச்சந்தருடைய நாடகங்களில் நடித்து, அவர் வழியாகவே மனதில் உறுதி வேண்டும்  என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, உறுதியான முறையில் வளர்ந்து,  திரைத்துறையில் தடம் பதித்தார்.

அன்புமணி, பாட்டாளி மக்கள் கட்சி

தமிழ் திரையுலகில் எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர். திரைப்படங்களில் நடித்து பணமும், புகழும் ஈட்டுவதை மட்டுமே லட்சியமாக கொள்ளாதவர். அவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் சமூகத்திற்கான ஒரு கருத்து இருக்கும்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *