கொரோனாவுக்கு மருந்து : பயோகானின் சொரியாசிஸ் மருந்தை பயன்படுத்த DGCL ஒப்புதல்

கொரோனா நோயாளிகளுக்கு மிதமான சிகிச்சைக்குப் பயன்படுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DGCI), பயோகான் மருந்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

பயோடெக்னாலஜி முக்கிய பயோகானின் “அவசரகால பயன்பாட்டிற்காக” இடோலிஜுமாப் இப்போது “இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு ஜெனரல்” (DGCI) ஒப்புதலுக்கு பிறகு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மிதமான சிகிச்சைக்கு பயன்படுத்தலாம் என கடந்த சனிக்கிழமை அறிவித்துள்ளனர்.

நாள்பட்ட பிளேக் தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சை அளிப்பதற்காக 2013 ஆம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட சிடி6 lgG1 மோனோக்ளோனல்  ஆன்டிபாடியான ALZUMAb யை மீண்டும் தயாரித்ததாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் “இது ஏற்கனவே பல ஆண்டுகளாக சொரியாசிஸ்க்கு சிகிச்சை அளிக்க பயோகான் அங்கீகரிக்கப்பட்ட மருந்து” என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால், மருந்தை பயன்படுத்தும் முன்பாக, நோயாளிகளிடமிருந்து எழுத்துப்பூர்வமாக அவர்கள் சம்மதம் பெறுவது கட்டாயம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஜெனரல் (DGCI) கொரோனா நோயாளிகளுக்கு இடோலிசுமாப் ஊசி செலுத்த அனுமதித்துள்ளது. சுமார் 32 ஆயிரம் ரூபாய் செலவாகும் இந்த சிகிச்சை, நோயாளிக்கு 4 குப்பிகளில் 8 ஆயிரம் ரூபாய்க்கு கொடுக்கப்பட உள்ளது.

இருப்பினும் இது வேறு வழியில்லாத நிலையில் மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் DGCI தெளிவாக கூறியுள்ளது. அதாவது சாதாரண பாதிக்கப்பட்ட நோயாளிகள் இதை பயன்படுத்த வேண்டியதில்லை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு இந்த ஊசி செலுத்தப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் முடிவுகள் திருப்திகரமாக இருப்பதாக அதிகாரி தெரிவித்தார். இந்த ஆராய்ச்சியில் நுரையீரல் நிபுணர்கள், மருந்தியல் நிபுணர்கள், AIIMS போன்றவற்றின் மருத்து நிபுணர்கள் ஈடுபட்டனர். அதிலும் வெற்றி கிடைத்துள்ளது.

கொரோனாவுக்கான பல சிகிச்சை மருந்துகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டுள்ளன. இதில் 5 மருந்துகளில் ரெம்டெசிவிர், சிப்ரெமி உட்பட மூன்று மருந்துகள் ஏற்கனவே DGCI யால் ஒப்புதல் பெற்றுள்ளது. அந்த வகையில் இடோலிசுமாப் ஊசியின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்க முடியும் என்பது ஆறுதாலக பார்க்கப்படுகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *