தானியங்கி இயந்திரத்தில் ரூபாய் 5 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படுமாம்…

தானியங்கி இயந்திரங்களில் (ஏடிஎம்) இனி 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் வசூலிக்கப்படும் என்ற புதிய நடைமுறை விரைவில் அமலுக்கு வர உள்ளது.

பொதுவாக நமது வங்கிக் கணக்கில் இருந்து தானியங்கி இயந்திரங்கள் மூலம் பணம் எடுப்பதற்கு குறிப்பிட்ட அளவில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது வங்கியைப் பொறுத்து கட்டணங்கள் மாறுபடும். அதே வங்கி தானியங்கி எந்திரங்களில் எத்தனை 5 முறை பணம் எடுத்தால் இலவசம் என்றும் அதைத்தாண்டி எடுக்கும்போது கட்டணம் வசூலிக்கும் நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது.

ஆனால், இனி நாம் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தாலே கட்டணம் வசூலிக்கப்படும் என்ற நடைமுறை அமலுக்கு வர உள்ளது. இது நமது ஐந்து இலவச பரிவர்த்தனைகளில் சேர்க்கக்கூடாது. புதிய விதிமுறைப்படி நாம் தானியங்கி இயந்திரங்களிலிருந்து ரூபாய் 5 ஆயிரம் எடுத்தால் மட்டுமே இது பொருந்தும். நீங்கள் ஒரு நேரத்தில் 5 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணம் எடுத்தால் 24 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.

தற்போது தானியங்கி இயந்திரங்களில் இருந்து 5 முறை நீங்கள் இலவசமாக பணம் எடுத்துக்கொள்ளலாம். அதன் பின்னர் ஆறாவது பரிவர்த்தனைக்கு ரூபாய் 20 கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. தானியங்கி இயந்திரங்கள் பயன்படுத்தப்படும் கட்டணம் தொடர்பாக மறு ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட இந்திய ரிசர்வ் வங்கி குழு அதன் பரிந்துரைகளை தற்போது சமர்ப்பித்துள்ளது.

இதனடிப்படையில் வங்கிகள் 8 ஆண்டுகளுக்கு பிறகு தானியங்கி இயந்திர கட்டணத்தை மாற்றலாம். 10 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை உள்ள நகரங்களில் தானியங்கி இயந்திரங்களில் பரிவர்த்தனைகளை அதிகரிப்பது குறித்து இந்தக் குழு வலியுறுத்தியுள்ளது. பெரும்பாலான மக்கள் இங்கு சிறிய தொகையை மட்டுமே தானியங்கி இயந்திரங்களில் மூலம் எடுக்கின்றனர். எனவேதான் ரூபாய் 5 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

தற்போது சிறிய நகரங்களில் 5 முறை மட்டுமே இலவசமாக பணம் எடுக்க முடியும் புதிய பரிந்துரையின்படி சிறு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு மற்ற வங்கிகளில் தானியங்கி இயந்திரங்களில் ஒவ்வொரு மாதமும் ஆறு முறை பணம் எடுக்க சலுகை கிடைக்கும்.

மும்பை, டெல்லி, சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்தில் மூன்று முறை தானியங்கி இயந்திரங்களில் இருந்து பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறார்கள். அதன் பிறகு நான்காவது முறையாக பணம் எடுத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *