நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகள் சென்னை மாநகராட்சி வெளியீடு

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டியது அவசியம். ஆகவே, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க 10 வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

உலகத்தையே பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகி வரும் கொரோனா வைரஸ் தொற்று வராமல் தடுக்க சமூக இடைவெளியை கடைபிடிப்பது, முக கவசம் அணிவது, அடிக்கடி கைகளை கழுவுவது என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தற்காத்துக்கொள்ள, உணவு பழக்கத்திலும் சில மாற்றங்களை செய்து கொள்ளுமாறு தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸ் நோய் தொற்றிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சித்தா  மற்றும் இயற்கை மருத்துவம் சார்ந்த 10 வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

இதன்படி,

  1. காலை ஒருவேளை கபசுர குடிநீர் பருக வேண்டும்.
  2. அவ்வப்போது சூடான தண்ணீர் குடிக்க வேண்டும்.
  3. உப்பு மற்றும் மஞ்சள் கலந்த மிதமான வெந்நீரில் காலை, மாலை என இருவேளை வாய் கொப்பளிக்க வேண்டும்.
  4. துளசி அல்லது வேப்பிலையில் மஞ்சள் பொடி மற்றும் உப்பு கலந்த நீரில் நீர் ஆவி பிடிக்க வேண்டும்.
  5. மஞ்சள் கலந்த பாலில் மிளகு பொடி கலந்து காலை மாலை இருவேளையும் பருகவேண்டும்.
  6. இவை இல்லாமல் மூலிகை டீ மற்றும் வேப்பம் பூ ரசம் தூதுவளை ரசம் மிளகு ரசம் இவற்றில் ஏதாவது ஒன்றைச் சாப்பிடலாம்.
  7. அண்ணாச்சி ஆரஞ்சு சாத்துக்குடி பழச்சாறு அருந்தலாம்.
  8. தினமும் 15 முதல் 20 நிமிடம் வரை காலை 7:30 மணிக்குள் அல்லது மாலை 5 முதல் 6 மணிக்குள்ளாக சூரிய குளியல் எடுத்துக் கொண்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இவ்வாறு நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க 10 வழிமுறைகளை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *