கொரோனா பாதிப்பு ; புதிய அபாயகரமான கட்டத்தை எட்டியுள்ளது – WHO எச்சரிக்கை

கொரானா நோய்த்தொற்று புதிய அபாய கட்டத்தை உலக நாடுகள் எட்டியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலக நாடுகளை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, சீன தலைநகர் பீஜிங் மற்றும் ஆஸ்திரேலியாவில் இரண்டாவது அலையை உருவாக்கியுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு 87 லட்சத்து 58 ஆயிரத்து கடந்துள்ளது. அதனால் ஏற்பட்டுள்ள உயிரிழப்பு 4 லட்சத்து 68 ஆயிரத்தை கடந்துள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே நாளில் உலக அளவில் அதிகப்பட்சமான எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக அமெரிக்கா, தெற்காசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நோய்த்தொற்று தீவிரமாகி உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட் ரோஸ் கூறியதாவது, “அமெரிக்கா, தெற்காசிய நாடுகள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் கொரோனா பாதிப்பு மிக தீவிரமாக பரவி வருகிறது. 

இதனிடையே கொரோனா பாதிப்பைத் தடுக்கும் மருந்து கண்டுபிடிப்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதனால் நாட்டு மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும். அது மட்டுமல்லாது உலக நாடுகள் பொருளாதாரத்தை மீட்க ஆர்வம் காட்டுகிறது. அதேநேரம் கொரோனா பெருந்தொற்று வேகமாக பரவி வருவதை கருத்தில் கொள்ள வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *