இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 50 ஆயிரத்தை நெருங்குகிறது ; தொற்று பாதிப்பு 25 லட்சத்து 58 ஆயிரம்

கொரோனா நோய்த் தொற்றுக்கு இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 58 ஆயிரத்தை கடந்த நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 49 ஆயிரத்து 980 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா நோய் தொற்று உலக நாடுகளை புரட்டிப்போட்டிருக்கும் நிலையில், தடுப்பு மருந்துகள் கண்டுபிடிப்பில் பல நாடுகள் முழுமூச்சில் ஈடுபட்டு வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை வைரஸ் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் நாளுக்கு நாள் நோயின் தீவிரம் அதிகரித்தே வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 ஆயிரத்து 490 பேர் இந்த நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்று ஒரேநாளில் மட்டும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 944 ஆக பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 18 லட்சத்து 62 ஆயிரத்தை தாண்டியது. அந்த வகையில் குணமடைந்தோர் விகிதம் 71.91 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.93 விழுக்காடாக குறைந்துள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6 லட்சத்து 77 ஆயிரத்து 444 ஆக உள்ளது. விழுக்காட்டளவில் 26.16 ஆக உள்ளது.

மராட்டிய மாநிலத்தை பொருத்தளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5 லட்சத்து 84 ஆயிரத்து 754 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 20 உள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 322 பேர் உயிரிழந்த நிலையில், மொத்த உயிரிழப்பு 19 ஆயிரத்து 749 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் நோய் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 4 லட்சத்து 8 ஆயிரத்து 286 ஆக உள்ளது. சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 56 ஆயிரத்து 719 ஆக உள்ளது.

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள தமிழகத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்து 32 ஆயிரத்து 105 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 5 ஆயிரத்து 860 பேர் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் நேற்று ஒரே நாளில் மட்டும் 127 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு 5 ஆயிரத்து 641 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தவரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 72 ஆயிரத்து 251 ஆக உள்ள நிலையில், சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 54 ஆயிரத்து 213 ஆக உள்ளது.

டெல்லியைப் பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 928 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்த உயிரிழப்பு 4 ஆயிரத்து 188 பேர். குணமடைந்து வீடு திரும்பியவர் எண்ணிக்கை 1 லட்சத்து 36 ஆயிரத்து 251 பேர். சிகிச்சை உள்ளவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 489 பேர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *