சுசீந்திரன் இயக்கத்தில் நடிக்கும் “புஷ்பா” பட வில்லன்

திண்டுக்கல் மாவட்டத்தில்  சுசீந்திரன் இயக்கத்தில் 5 மொழிகளில் தயாராகும் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த புதிய படத்துக்கு , ‘ வள்ளி_மயில்  என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இதில் பாரதிராஜா, சத்யராஜ் , விஜய் ஆண்டனி ஆகிய மூன்று பேரும் இணைந்து நடிக்கிறார்கள் .

ஆந்திராவில் வெற்றிகரமாக ஓடிய ஐதி ரத்னலு ‘ என்ற தெலுங்கு படத்தில் நடித்த பரியா அப்துல்லா , ‘ வள்ளி மயில் ‘ ஆக நடிக்கிறார் . ‘ புஷ்பா ‘ புகழ் சுனில்  வில்லனாக நடிக்கிறார். மேலும் தம்பி ராமய்யா , சிங்கம் புலி , ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் .

படத்தின் கதை 1980 – களில் நடப்பது போல் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது . படம் தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி ஆகிய 5 மொழிகளில் தயாராகி வருகிறது .

தமிழகம் வரும் பொழுதெல்லாம் பழனி மலைக்கு வந்து முருகனை தரிசனம் செய்வேன் என்றும் தெரிவித்தார், முன்னதாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சுனில் – ரஜினி,கமல், விஜய் ,அஜித் என தமிழக முன்னணி நடிகர்களுடன் நடிக்க ஆசை எனவும் மேலும் வள்ளி மயில் திரைப்படத்தில் சவாலான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாகவும், இந்த படம் பெரிய அளவில் பேசப்படும் படமாக   உருவாகி வருகிறது என்றும் தெரிவித்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *