ஊராட்சி மன்ற தலைவர் அது உயிருக்கு பாதுகாப்பு இல்லையா மு.க.ஸ்டாலின் கேள்வி

கோவை மாவட்டம் ஜே கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவரான சரிதா கோவை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

அந்தப் புகாரில், தான் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், தன்னை அலுவலகத்தில் உட்கார விடாமல் முன்னாள் தலைவர் பாலசுப்பிரமணியம் மிரட்டுவதாக தெரிவித்துள்ளார்.

ஊராட்சி மன்ற தலைவர் சரிதாவின் இந்த புகார் குறித்து கோவை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அவர் திமுக சார்பில் ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து திமுக தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மாவட்டம் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி கே சரிதா சாதிரீதியாக அவமானப்படுத்தப்பட்டு கொலை மிரட்டலுக்கும் உள்ளாகி இருக்கிறார் தன்னை ஆவணப்படுத்தும் அவர்கள் யார் என்று குறிப்பிட்டு கோவை மாவட்ட காவல்துறைக்கு புகார் கொடுத்துள்ளார்.

ஊராட்சி மன்ற தலைவர் அது உயிருக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா சரிதாவுக்கு சட்டப் பாதுகாப்பு தரவேண்டும் அவள் அவரை மிரட்டும் ஓர் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்”

இவ்வாறு திமுக தலைவர் மு க ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *