மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு தபால் வாக்கு: தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து திமுக வழக்கு

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் விரிவுபடுத்தப்பட்ட தபால் வாக்கு முறை திட்டத்தை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு ஜனவரி 7ஆம் தேதி மற்ற வழக்குகளுடன் விசாரிக்கப்பட உள்ளது.

தேர்தல் காலங்களில் நாட்டின் பாதுகாப்பு படைகளில் உள்ளவர்கள், வெளிமாநில மற்றும் மாவட்டங்களில் பணியாற்றி வரும் காவல்துறை மற்றும் ஆயுதப் படையினர், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் ஆகியோர் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக தபால் ஓட்டுக்கள் பதிவு செய்யும் நடைமுறை தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்கு அளிக்கும் வசதியை வழங்குவது என தேர்தல் ஆணையம் முடிவு எடுத்துள்ளது.

தபால் ஓட்டை பெறுவதற்காக வாக்குச்சாவடி அதிகாரிகள் நேரில் சென்று விண்ணப்பத்தை வாக்காளர்களும் வழங்க வேண்டும் என விதி உள்ளதால் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும், அதனால் அந்த முறையை திரும்பப் பெற வேண்டும் என டிசம்பர் முதல் வாரத்தில் இந்திய தேர்தல் ஆணையத்தில மனு கொடுக்கப்பட்டது.

அதேசமயம் 80 வயதிற்கு மேலான மூத்த குடிமகன்களுக்கு என தனியாக சிறப்பு வாக்குச்சாவடிகளை அமைத்தட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் திமுக மனு மீது தேர்தல் ஆணையம் உரிய முடிவு எடுக்கவில்லை என்பதால் சென்னை உயர் நீதிமன்றத்தில் திமுக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா, சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, இதே விவகாரம் தொடர்பான வழக்கு ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதால், இந்த வழக்கையும் ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று அதிமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் கோரிக்கை வைத்தார்.

இதை ஏற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *