மின்கட்டண குளறுபடி : கருப்புச்சட்டை அணிந்து மு.க.ஸ்டாலின் போராட்டம்

மின் கட்டணத்தில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை கண்டித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருப்புச்சட்டை அணிந்து, கருப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார்.

தமிழகம் முழுவதும் கொரோனா நோய்த்தொற்றுக்கு அடுத்தபடியாக பரபரப்பாக பேசப்பட்ட பிரச்சினை எதுவென்றால், மின்கட்டண உயர்வு. தமிழகத்தில் பொது மக்களிடையே கடுமையான அதிருப்தியை இந்த மின்கட்டண பிரச்சனை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த மின்கட்டண உயர்வு அனைத்து தரப்பு மக்களையும் பாதித்திருக்கும் நிலையைக் கண்டித்து மின் கட்டணத்தில் சலுகை அளிக்க வேண்டும். மீட்டிங் டிரேடிங்கில் ஏற்படும் உணர்வை சரி செய்ய வலியுறுத்தியும் திமுக சார்பில் தமிழகமெங்கும் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருப்புச்சட்டை அணிந்து, கையில் கருப்பு கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது தமிழக அரசுக்கு எதிராகவும் தமிழக மின்வாரியத்தை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினார்.

இதேபோன்று சென்னை சிஐடி காலனியில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி தலைமையிலும், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் தனிமனித இடைவெளியை கடைப்பிடித்து, முகக்கவசம் அணிந்து திமுக தொண்டர்கள் பங்கேற்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *