கொரோனாவிலிருந்து காத்துக்கொள்ள 10 கட்டளைகள் – அறிவுறுத்தும் மருத்துவ நிபுணர்கள்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இன்றுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் உலகம் முழுவதும் இந்த நோய்த் தொற்றுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 85 லட்சத்தை கடந்துள்ளது. உயிரிழப்பு 7 லட்சத்தை கடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள 10 கட்டளைகளை மருத்துவ நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

அவை :-

  1. உடற்பயிற்யை தொடர்ந்து செய்யுங்கள்.
  2. சீரான உணவு சாப்பிடுங்கள், போதுமான தூக்கம் தூங்குங்கள்.
  3. நண்பர்களுடன், குடும்பத்தினருடன் பேசும்போது தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள்.
  4. மது, போதை பொருள்கள், புகையிலை பொருள்கள் போன்றவற்றை பயன்படுத்தாதீர்கள்.
  5. கொரோனா பற்றி பேசுவதை குறையுங்கள்.
  6. பதற்றத்தை தவிருங்கள். மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள்.
  7. முடிந்தவரை வீட்டில் இருங்கள். காய்ச்சல், மார்பு தொற்று என்றால் தனிமைப்படுத்திக் கொண்டு, மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்
  8. எப்போதும் முக கவசம் அணியுங்கள், கைகளை நன்றாக கழுவுங்கள்.
  9. உங்கள் கண்களை, மூக்கை, வாயை தொடுவதை தவிருங்கள்.
  10. கதவின் கைப்பிடிகள், சுவிட்சுகள், தொலைக்காட்சி, ரிமோட், செல்பேசி போன்றவற்றை கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்துங்கள்.

இவ்வாறு 10 அறிவுரைகளை மருத்துவ நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *