இன்றுடன் முடிவடைகிறது தேர்தல் பரப்புரை

தமிழகத்தில் இன்று இரவு 7 மணியுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைகிறது. மேலும் கருத்து கணிப்புகளை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

            வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்தே அனைத்து கட்சி தலைவர்களும் பல தேர்தல் உத்திகளுடன் தங்களது தேர்தல் பரப்புரையை செய்து வந்தனர். இந்த நிலையில் இன்று இரவு 7 மணியுடன் தமிழகம், புதுச்சேரி, மற்றும் கேரளாவில் பரப்புரை ஓய்கிறது. இன்று 7 மணிக்கு முன்னதாக பரப்புரைக்காக வந்தவர்கள் தொகுதியை விட்டு வெளியேர வேண்டும். இதன் பிறகு கருத்து கணிப்புகள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் இன்று முதல் மூன்று நாட்கள் மதுக்கடைகள் மூடப்படும்.

            தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் காலை 7 மணியளவில் வாக்குப்பதிவு தொடங்கவுள்ள நிலையில், 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் தயார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் 1 இலட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. இவற்றுடன் 1 இலட்சத்து 14 ஆயிரத்து 205 கட்ப்பாட்டு இயந்திரங்களும், யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்துகொள்ளும் வகையில் “விவி பேட்” கருவி 1 இலட்சத்து 20 ஆயிரத்து 807 இயந்திரங்களும் இணைக்கப்படவுள்ளன.

            தேர்தல் பணியில் 300 கம்பெனி துணைராணுவ படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர். மேலும் தேர்தல் பணியில் 4 இலட்சத்து 50 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு நாளை மறுநாள் இரவு 7 மணிக்கு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக பெட்டிகளில் வைத்து சீல் வைக்கப்பட்டு, வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

            மே மாதம் 2 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்று மாலையே தமிழகத்தில் அடுத்த ஐந்தாண்டு ஆட்சியமைக்க போவது யார் என்று தெரியவரும்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *