தரமில்லா PPE கிட் ; ஒரு மணி நேரத்திலேயே மூச்சுத்திணறல்; புலம்பும் புதுச்சேரி செவிலியர்

கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் பி.பி.இ கிட் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் தரமற்ற பிபிஇகிட் வழங்கப்படுவதாகச் செவிலியர் ஒருவர் புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து செவிலியர் ஒருவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “தரமற்ற பி.பி.இ கிட் குறித்து புதுவை ஆளுநர் மற்றும் செயலாளருக்குக் கடிதம் எழுதியும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. கதிர் கிராமம் மருத்துவமனைக்கும், அரசு மருத்துவமனைக்கு, பலரின் உதவிகள் மூலம் உபகரணங்கள் வாங்கி கொடுத்தும், எங்களுக்குத் தரமான உபகரணங்கள் வழங்கப்படவில்லை.

தரமில்லாத பிபிஇ கிட் அணிவதால் ஒரு மணிநேரத்திலேயே மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. இதனால் தொடர்ந்து பாதுகாப்பு உடை அணிய முடியாமல் பலர் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவித்துள்ளார்.

தற்போது இந்த ஆடியோ வைரலாகி வருகிறது. இது குறித்து புதுச்சேரி சுகாதாரச் செயலாளர், தரமான பி.பி.இ கிட் தான் வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.

புதுச்சேரியில் நடந்து முடிந்த தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றும், எம்.எல்.ஏக்கள் யாரும் பதவியேற்காததால், கொரோனா பணிகளை துரிதபடுத்த முடியாமல் என்.ஆர்.காங்கிரஸ் அரசு தவித்து வருகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *