புதுக்கோட்டையில் மின்னல் தாக்கி தந்தை, மகன், உட்பட 3 பேர் உயிரிழப்பு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் வட்டம் திருப்புனவாசல் அருகே உள்ள பறையத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பழனிசாமி மகன் சஞ்சய்(18), மகள் சஞ்சனா(16), இவர்கள் இருவரும் திருப்புனவாசலில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர்.
இவர்களது சித்தப்பா இளையராஜா(36), நேற்று பள்ளிமுடித்த பிறகு இருவரையும் தனது பைக்கில் ஏற்றி கொண்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். பறையத்தூர் அருகே சென்றபோது லேசான மழை பெய்தது. அப்போது, மின்னல் தாக்கியதில் அந்த இடத்திலேயே 3 பேரும் உயிரிழந்தனர்.