முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார்

கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சியில் இணைந்துள்ள முன்னாள் இந்திய ஆட்சிப்பணி அதிகாரி சந்தோஷ் பாபுவுக்கு கட்சியின் பொதுச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளாக பணியாற்றி அவர்கள் தங்களது பணி ஓய்வுக்குப் பிறகு அரசியல் கட்சிகளில் இணைவது தற்போது தொடர் கதையாகி வருகிறது. அந்த வகையில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு தற்போது கமலஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சி இணைந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றிய சந்தோஷ் பாபு பணி ஓய்வு பெறுவதற்கு எட்டு ஆண்டுகள் உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென விருப்ப ஓய்வு பெற்றார்.

இந்திய ஆட்சிப் பணியில் 25 ஆண்டுகளுக்கு மேல் பணி அனுபவம் உள்ள சந்தோஷ் பாபு குழந்தை தொழிலாளர் ஒழிப்புகாக தமிழக அரசின் ‘சிறந்த மாவட்ட ஆட்சியர்’ விருது பெற்றவர். மேலும், அவருக்கு ‘தமிழகத்தின் பெருமை’ என்ற விருதும் வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2017ஆம் ஆண்டில் அவருடைய தலைமையில் தேசிய மின் ஆளுகை விருதையும், ஸ்குவாட்ஸ் ஸ்மார்ட் கவர்ணன்ஸ் பிளாட்டினம் விருதையும் வென்றார். சந்தோஷ் பாபு ஒவ்வொரு பதவியிலும் அவர் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி மக்களின் வாழ்க்கையை மாற்றி உள்ளார். அவர் தனது வாழ்க்கையில் 250க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளையும், புதிய முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.

ஐடி துறையின் முதன்மை செயலாளராகவும், சிவகங்கை மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியராக அவர் ஆற்றிய பங்களிப்புக்கள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. அவர் ஒரு தகுதி வாய்ந்த மருத்துவர். மேலும், அவர் லண்டன் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ், ஹார்வார்டு பல்கலைக்கழகம் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பட்டம் பெற்றவர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *