தொலைக்காட்சி மூலமாகவே பாடம் கற்பிக்கப்படும் : ஆன்லைன் வகுப்புகள் கிடையாது – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

“அரசுபள்ளி மாணவர்களுக்கு தொலைக்காட்சி மூலமாக மட்டுமே பாடங்கள் கற்பிக்கப்படும், ஆன்லைன் வகுப்புகள் கற்பிக்கக் கூடாது” என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார்.
நேற்று முன்தினம் (08/07/2020) ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே நடைபெற்ற அரசுப் பள்ளிகளுக்கான கூடுதல் கட்டிடங்கள் கட்டுவதற்கான பூமி பூஜையில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசியபோது, “தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்படும் வரும் ஜூலை 13-ஆம் தேதி முதல்வர் அதனை தொடங்கி வைப்பார்” என்று தெரிவித்திருந்தார்.
இது கடுமையான சர்ச்சைகளை ஏற்படுத்தி விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில் நேற்று (ஜூலை 9) ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் இதை மறுத்துள்ளார்.
அப்போது பேசிய அவர், “பாடங்கள் ஆன்லைன் வாயிலாக நடத்தப்படமாட்டாது. தொலைக்காட்சிகள் மூலம் பாடங்கள் நடத்தப்படும். இதற்காக 3 தொலைக்காட்சியில் தயார் நிலையில் உள்ளன. பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் தேர்வு எழுதினால் மட்டுமே தேர்ச்சி வழங்க முடியும். பத்தாம் வகுப்பை போல தேர்வு எழுதாமல் அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *