தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு கன மழை வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

இன்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் புவியரசன், “மன்னார் வளைகுடா பகுதியில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது இது அடுத்த 12 மணி நேரத்தில் வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக அதே இடத்தில் நீடிக்கக் கூடும்.

இதன்காரணமாக கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழையும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

நாளை ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கனமழை புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், கோயமுத்தூர், நீலகிரி, கடலூர், தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை அடுத்த இரு தினங்களுக்கு மிதமான மழையும் அவ்வப்போது ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை அளவாக கடலூர் மாவட்டம் கொத்தவாச்சேரியில் 19 சென்டிமீட்டர், காரைக்கால், நாகப்பட்டினம் தல 16 சென்டிமீட்டர், திருவாரூர் மாவட்டம் குடவாசல் 15 சென்டிமீட்டர், சென்னை டிஜிபி அலுவலகம், திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கத்தில் 12 சென்டிமீட்டர், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் 11 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

சூறாவளி காற்று மணிக்கு நாற்பது ஐம்பது கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீச வாய்ப்பு இருப்பதால் மீனவர்கள் குமரிக்கடல் மன்னர் வலைகுட தென் தமிழக கடலோரப் பகுதிகளுக்கு அடுத்த 24 மணி நேரத்திற்கும் கேரளக் கடலோரப் பகுதி லட்சத்தீவு மாலத்தீவு பகுதிகளுக்கு அடுத்த இரண்டு நாட்களுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்”.

இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்தார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *