இந்தியா பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடியை சந்திக்கிறது: இது 100 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு : ரிசர்வு வங்கி ஆளுநர்

உலகையே ஆட்டிப் படைத்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் 100 ஆண்டுகளில் இல்லாத பொருளாதார மற்றும் சுகாதார நெருக்கடிக்கு இந்தியா உள்ளாகி வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.

பாரத ஸ்டேட் வங்கியின் வங்கியியல் மற்றும் பொருளாதார மாநாடு இன்று நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கலந்து கொண்டார். அப்போது அவர், “கொரோனா  என்பது கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மிக மோசமான சுகாதார மற்றும் பொருளாதார நெருக்கடி ஆகும். போர் இல்லா காலத்தில் ஏற்பட்டுள்ள மிகப்பெரும் நெருக்கடியை உலகம் சந்தித்து வருகிறது. இது உற்பத்தி, வேலைவாய்ப்புத் துறைகளில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது.

இது உலகெங்கிலும் உள்ள வேல்யூ சங்கிலிகள், தொழிலாளர் மற்றும் மூலதன இயக்கங்களை முடக்கியுள்ளது. நமது நிதி அமைப்பை பாதுகாக்கவும், தற்போதைய நெருக்கடியில் பொருளாதாரத்தை வளர்க்கவும், ரிசர்வ் வங்கி பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

2019 பிப்ரவரி முதல் ஒட்டுமொத்த அடிப்படையில், கொரோனா தாக்கம் தொடங்கும் வரை ரெப்போ விகிதத்தை 135 அடிப்படை புள்ளிகள் குறைத்தோம். பொருளாதார வளர்ச்சியின் மந்த நிலையை சமாளிப்பதற்காக இந்த வட்டி குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *