சீனாவுக்கு எதிராக களத்தில் நிற்க வேண்டிய பிரதமர் ஓடி ஒளிந்து கொள்கிறார் – ஜோதிமணி எம்பி

தேச வரலாற்றில் இவ்வளவு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை என ஜோதிமணி எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்திய – சீன எல்லையில் நடந்த சண்டையில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில். கரூர் லைட்ஹவுஸ் கார்னரில் உள்ள காந்தி சிலை முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி ஒரு மணி நேரம் மௌன அஞ்சலி செலுத்தினார் கரூர் எம்பி ஜோதிமணி.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “சீனாவுக்கு எதிராக களத்தில் நிற்க வேண்டியவர் இந்திய பிரதமர். தற்போது ஓடி ஒளிந்து கொள்கிறார். காங்கிரஸ் கட்சியினர் பிரதமர் எங்கே? என தேடி கண்டுபிடித்து வெளியே கொண்டு வரும் நிலைக்கு மோடி இருப்பது வேதனை அளிக்கிறது. தேச வரலாற்றில் இவ்வளவு பலவீனமான பிரதமரை நாடு கண்டதில்லை.

இந்திய நட்பு நாடான நேபாளம், இந்திய பகுதிகளை நேபாளத்தின் பகுதிகள் என அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த அளவு மோசமான நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டார். எதிர் நாடுகளின் படைகளைக் கண்டு அஞ்சி நிற்கின்ற பிரதமரை நாடு கண்டதில்லை. இது தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது” என குற்றம்சாட்டியுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *