ஐ.பி.எல் : டெல்லி வெற்றி
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற IPL இரண்டாவது போட்டியில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் போட்டியிட்டன. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன்படி முதலில் பேட் செய்த சென்னை அணியின் துவங்க வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். பின்னர் மொயீன் அலி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் ஆட்டத்தை பொறுப்பான முறையில் முன்னெடுத்து சென்றனர். பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களும் அதிரடியாக விளையாட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் அடித்தது.
189 ரன்கள் வெற்றி இலக்காக கொண்டு விளையாடிய டெல்லி அணிக்கு பிரித்வி ஷா மற்றும் தவான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களுக்கு முன்பாகவே வெற்றி இலக்கை எட்டிப்பிடித்தது டெல்லி.