“கோமியம் நம்மை பாதுகாக்காது” : அறிவுரை கூறிய பத்திரிகையாளர் கைது – மணிப்பூர் பா.ஜ.க அரசு அராஜகம்

இந்தியாவில் வேகமாகப் பரவி வரும் கொரோனா தொற்று பாதித்து அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் கொரோ தொற்று பாதித்த மணிப்பூர் மாநில பா.ஜ.க தலைவர் திகேந்திர சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மேலும், கொரோனா தொற்று பாதித்து பா.ஜ.க தலைவர்கள் பலரும் உயிரிழந்துவரும் நிலையிலும், பா.ஜ.க எம்.பி பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட பலர் கோமியம் குடிப்பதால் எனக்கு கொரோனா வரவில்லை என கூறி வருகின்றனர்.

இந்நிலையில், மணிப்பூர் பா.ஜ.க தலைவர் கொரோனா தொற்றால் இறந்ததற்கு இரங்கல் தெரிவித்திருந்த பத்திரிகையாளர் கிஷோர்சந்தர வாங்கே, சமூக செயற்பாட்டாளர் எரேண்ட்ரோ லேசாம்பன் ஆகியோர், கோமியம் மற்றும் பசுச்சாணம் கொரோனாவில் இருந்து பாதுகாக்காது என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தனர்.

இதையடுத்து மணிப்பூர் அரசு பத்திரிகையாளர் கிஷோர்சந்தர வாங்கே, சமூக செயற்பாட்டாளர் எரேண்ட்ரோ லேசாம்பன் இருவரையும் தேசியப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மணிப்பூர் அரசின் இந்த நடவடிக்கைக்குப் பத்திரிக்கையாளர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *