கேரளாவில் 80 இடங்களில் இடதுசாரிக்கூட்டணி முன்னிலை; கடும் போட்டி அளிக்கும் காங்கிரஸ்

கேரளவில் உள்ள 140 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு வரும்நிலையில் 80இடங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி முன்னிலையில் இருக்கிறது.

எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 58 இடங்களில் முன்னணியில் இருக்கிறது. நீமம் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கும்மணம் ராஜசேகர் 155 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.

அதேமசமயம், திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி, பாலக்காடு தொகுதியில் போட்டியிட்ட ,களக்கூட்டம் தொகுதியில் போட்டியிட்ட ஷோபா சுரேந்திரன், திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிட்ட கிருஷ்ணகுமார், மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்டியி்ட்ட பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் ஆகியோர் பின்தங்கியுள்ளனர்.

பாஜக சார்பில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நவ்யா ஹரிதாஸ் முன்னிலை பெற்றுள்ளார். மெட்ரோ மென் ஸ்ரீதரன் 1,200 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார்.தர்மடம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வர் பினராயி விஜயன் 250 வாக்குகள் முன்னிலையுடன் உள்ளார். புதுப்பள்ளி தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் உம்மன் சாண்டி 17 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார்.

இடது சாரி கூட்டணியில் உள்ள மாணி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ஜோஸ்கே மாணி பாலா தொகுதியில் முன்னிலை பெற்றுள்ளார்.

அருவிக்கரா,கோவளம், திருவனந்தபுரம், வட்டக்கரா ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. அதிலும் வட்டக்கரா தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கூட்டணியில் உள்ள புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் கே.கே.ரமா 1230 வாக்குகளுடன் முன்னிலை பெற்றுள்ளார். குட்டியாடி தொகுதியில் ஐயுஎம்எல் வேட்பாளர் அப்துல்லா முன்னிலை பெற்றுள்ளார். பலுசேரியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தர்மஜன் போல்காட்டி முன்னிலை பெற்றுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *