கேரளா உள்ளிட்ட மாநில தேர்தல் முடிவு; காங். கட்சிக்கு கடும் பின்னடைவு: குலாம்நபி ஆசாத் கருத்து

கேரளா உள்ளிட்ட மாநிலங்களின் தேர்தல் முடிவு காங்கிரஸ் கட்சிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேர்வு விவகாரத்தில் அதிருப்தி தெரிவித்த 23 தலைவர்களில் ஒருவரான மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத், நடந்து முடிந்த ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் குறித்து, தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், ‘கேரளா உட்பட பிற மாநிலங்களில் வெளியான தேர்தல் முடிவுகளை பார்க்கும் போது, அது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சியைப் பொருத்தவரை, தற்போதைய தேர்தல் முடிவுகள் ஏற்புடையதாக இல்லை.

குறிப்பாக கேரளாவில் ஏற்பட்ட தோல்வி மிகவும் ஏமாற்றமளிக்கிறது. இந்த தோல்வி முற்றிலும் எதிர்பாராதது. தேர்தல் தோல்விக்கு, கட்சி செயல்படவில்லை என்றோ, மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கவோ விரும்பவில்லை. ஒற்றுமையுடன் இருந்து கட்சியை வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்வதில் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தொற்றுநோயைக் கையாள்வதில் பிரதமர் மோடி சரியாக செயல்படவில்லை. அவரது அரசும், மத்திய அமைச்சர்களும் தலைமறைவாக உள்ளனர். அவர்கள் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க வேண்டும்’ என்றார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *