மே, ஜூன் மாதங்களுக்கு 5 கிலோ உணவு தானியங்கள் இலவசம் -பிரதமர் மோடி அறிவிப்பு
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். பாதிப்பு அதிகம் உள்ள 11 மாநிலங்களின் முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
இதனையடுத்து பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
“கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஏற்படும் சிரமத்தைக் குறைக்கும் வகையில், பிரதமரின் கரீப் கல்யாண் திட்டத்தில், மே மற்றும் ஜூன் மாதத்திற்கு 5 கிலோ தானியங்கள் இலவசமாக வழங்கப்படும். ரூ.26000 கோடி செலவில் உணவு தானியங்கள் வழங்குவதன்மூலம் 80 கோடி மக்கள் பயனடைவார்கள்”
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.