ஒரே நாளில் மூன்று மாணவர்களின் உயிரை காவு வாங்கிய நீட் தேர்வு

இன்று காலை மதுரை தல்லாகுளம் பகுதியைச் சேர்ந்த ஜோதி ஸ்ரீ துர்கா என்ற மாணவி நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தின் துயரம் மறைவதற்குள் மேலும் இரு மாணவர்கள் அடுத்தடுத்து நீட் தேர்வு அச்சத்தால் உயிரிழந்திருக்கும் செய்தி தமிழகத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி அருகே இலக்கியம்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன்-ஜெயசித்ரா தம்பதியினரின் மகன் ஆதித்யா. நீட்தேர்வுக்காக தன்னை தயார்படுத்திக் கொண்டிருந்த அந்த மாணவர், நாடு முழுவதும் நாளை நீட் தேர்வு நடைபெற இருக்கும் சூழ்நிலையில் மிகுந்த மன அழுத்தத்தாலும் நீட் தேர்வு குறித்த அச்சத்தாலும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த செய்தி வெளியாகி பெரும் சோகத்தை விளைவித்த நிலையில் மேலும் ஒரு மாணவனின் தற்கொலை செய்தி பேரிடியாக வந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு மலை சுற்றி ரோடு இடையன் பரப்பு பகுதியை சேர்ந்த எலக்ட்ரிக் கடை உரிமையாளர் முருகேசன் என்பவர் மகன் மோதிலால் என்பவர் நாளை நீட் தேர்வு இருந்த நிலையில் அதுகுறித்த அச்சத்தால் அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஆக, இன்று ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று மாணவர்கள் நீட் தேர்வு குறித்த அச்சத்தாலும், மன அழுத்தத்தாலும் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் தமிழகத்தையே உலுக்கி உள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *