புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் : எம்.ஃபில் படிப்பு நிறுத்தம்; உயர்கல்விக்கு இடையே விடுப்பு

புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. அதில் சில முக்கியமான பல அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. நாட்டில் இனி எம்.ஃபில் படிப்பு நிறுத்தப் படுவதாகவும், உயர்கல்விக்கு இடையே ஒரு சில ஆண்டுகளுக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு, மீண்டும் கல்வியைத் தொடர வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்டோர் கூட்டாக நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது, உயர் கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அறிவித்திருக்கும் மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் கரே,  அதன் விவரங்கள் செய்தியாளர்களிடம் அறிவித்தார். 2030 ஆம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்பதை உறுதிப்படுத்த புதிய கல்விக் கொள்கை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார். மேலும் அதனை செயல்படுத்தும் வகையில் உயர்கல்வியில் முக்கிய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அவற்றில் குறிப்பிடத்தக்கவை :-

 1. நாட்டில் எம்.ஃபில் (M.Phil.,) படிப்புகள் நிறுத்தப்படுவதாக புதிய கல்விக் கொள்கை முடிவு செய்யப்பட்டுள்ளது.
 2. அடுத்த 15 ஆண்டுகளில் இணைப்புக் கல்லூரி முறை நிறுத்தப்படும்.
 3. உயர்கல்வி படிப்புகளில் விடுப்பு எடுத்து மீண்டும் படிக்கலாம். அதாவது பொறியியல் போன்ற உயர் கல்வி படிப்புகளில் சேரும் மாணவ – மாணவிகள் ஒரு சில ஆண்டுகள் விடுப்பு எடுத்து விட்டு மீண்டும் தொடர அனுமதிக்கப்படுவார்கள்.
 4. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கல்விமுறை ஒரே மாதிரியாக இருக்கும்.
 5. ஐந்தாம் வகுப்பு வரை தாய் மொழி கல்வி கட்டாயம்.
 6. எட்டாம் வகுப்பு வரை தாய்மொழிக் கல்வியில் கற்பிக்க நடவடிக்கை.
 7. மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கல்வியை உறுதி செய்ய புதிய பாடத்திட்டம் அறிமுகம்.
 8. பள்ளி வகுப்புகள் 5-3-3-4 என்ற முறையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
 9. ஆறாம் வகுப்பு முதல் தொழிற்கல்வியின் அடிப்படைகள் கற்பிக்கப்படும்.
 10. உயர்கல்விக்கான அமைப்புகளை ஒழுங்குபடுத்த ஒரே வாரியம் அமைக்கப்படும்.
 11. நாடு முழுவதும் கல்வித்தரம் ஒரே மாதிரியாக இருக்கும்.
 12. தமிழ் உள்ளிட்ட செம்மொழி அந்தஸ்து பெற்ற மொழிகளுக்கும், இலக்கிய படைப்புகளுக்கும் ஊக்கமளிக்கப்படும்.
 13. பள்ளிப் படிப்பை பாதியிலேயே கைவிட்ட சுமார் 2 கோடி குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
 14.  

  புதிய கல்வி முறை, 3 ஆண்டு அங்கன்வாடி / மழலையர் கல்வியுடன், 12 பள்ளிக்கூடப் படிப்பைக் கொண்டதாக இருக்கும்.

 15.  

  8 வயது வரையிலான குழந்தைகளுக்கு முன் குழந்தைப்பருவ கவனிப்பு மற்றும் கல்விக்கான தேசியப் பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் கட்டமைப்பை (National Curricular and Pedagogical Framework for Early Childhood Care and Education – NCPFECCE) தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (NCERT) உருவாக்கும்.     

 16.  

  மும்மொழித் திட்டம் உள்பட அனைத்து மட்டத்திலான பள்ளி மற்றும் உயர்கல்வியில் சமஸ்கிருதம் மாணவர்களின் விருப்பமாக இருக்கும்.

தொடர்ந்து புதிய கல்வி கொள்கை குறித்து மாநிலங்களிடம் பொதுமக்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. புதிய கல்விக் கொள்கையை தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் ஆண்டில் புதிய கல்விக் கொள்கை முழுமையாக இருக்கும் என்றும் மத்திய உயர்கல்வித் துறை செயலாளர் அமித் கரே கூறியுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *