டிஆர்பி மோசடி: செய்தி சேனல்கள் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவது 12 வாரங்களுக்கு நிறுத்தம்

தொலைக்காட்சி நிறுவனங்கள் டிஆர்பி ரேட்டிங் புள்ளிகளில் மோசடி செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தீவிரமடைந்து வருகிறது. இதை தொடர்ந்து அனைத்து மொழிகளிலும் ஒளிபரப்பாகும் செய்தி சேனல்களுக்கான டிஆர்பி ரேட்டிங் வெளியிடுவது 12 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கப்படுவதாக ஒளிபரப்பு ஆய்வுக்குழு (பி ஏ ஆர் சி) தெரிவித்துள்ளது.

மும்பையில் உள்ள ரிபப்ளிக் சேனல், பக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய சேனல்கள் டிஆர்பி முறைகேட்டில் ஈடுபட்டு பார்வையாளர்களையும், வருமானத்தையும் பெருக்கும் நோக்கில் செயல்பட்டதாக மும்பை காவல்துறையினர் கண்டுபிடித்தனர். இதுதொடர்பாக ஐந்து பேரை கைது செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பார்வையாளர்கள் மற்றும் விளம்பரதாரர் களையும் கவரும் நோக்கில் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் சேனல்களை என்னேரமும் ஆன் செய்தே வைத்திருப்பதற்கு மாதம் 400 ரூபாய் முதல் 700 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்துள்ளது கண்டறியப்பட்டது.

இந்த டிஆர்பி மோசடி தொடர்பாக ரிபப்ளிக் சேனலின் செய்தி பிரிவில் உள்ள சில உயர் அதிகாரிகள் நேற்று காவல்துறை விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். ஆனால், ரிபப்ளிக் சேனல் தாங்கள் எந்த முறைகேடும் செய்யவில்லை என்று மறுத்து வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் பார்வையாளர்களை மதிப்பீடு செய்து டிஆர்பியை கணக்கிட்டு வெளியிடும் பி ஏ ஆர் சி நிறுவனம் அடுத்த ஒரு வாரத்துக்கு அனைத்து மொழிகளின் செய்தி சேனல்களின் டிஆர்பி ரேட்டிங் கணக்கிடுவதை நிறுத்தி வைப்பதாக இன்று அறிவித்துள்ளது.

இதுகுறித்து பி ஏ ஆர் சி நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், “புள்ளிவிவரங்களை மதிப்பிடுதல் தரத்தை உயர்த்துதல் ஆகியவற்றில் எங்கள் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு ஆய்வுகளை மேற்கொள்ள இருக்கிறது. இந்த ஆய்வுகளுக்கு 8 முதல் 12 வாரங்கள் தேவைப்படும்.

ஆதலால் அடுத்த 12 வாரங்களுக்கு அனைத்து மொழிகளிலும் செய்தி சேனல் களுக்கான டிஆர்பி ரேட்டிங் வாரந்தோறும் வெளியிடுவது தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக ரிபப்ளிக் சேனல் டிஆர்பி ரேட்டிங் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது இந்த மனுவை விசாரிக்க மறுத்த உச்சநீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு ரிபப்ளிக் சேனல் நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *