பொருளாதாரத்தை முழுமையாக அழிப்பது எப்படி? பாஜக அரசை விமர்சிக்கும் ராகுல் காந்தி

பொருளாதாரத்திலும் வீழ்ச்சி, கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதிலும் வீழ்ச்சி என பாஜக அரசின் தோல்விகள் குறித்து தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி.

சர்வதேச நாணய நிதியம் அண்மையில் வெளியிட்ட அறிவிப்பில் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 10.33 விழுக்காடு வீழ்ச்சி அடையும் என்று குறிப்பிட்டிருந்தது. அதை சுட்டிக்காட்டியும். வங்கதேசத்தை விட இந்தியா கொரோனா வைரஸை மோசமாக கையாண்டது குறித்தும் ராகுல்காந்தி விமர்சித்திருக்கிறார்.

இந்நிலையில் சர்வதேச நாணய நிதியம் 2020 ஆம் ஆண்டுக்கான புள்ளி விவரப் பட்டியலில் வங்கதேசம் அதிகபட்சமாக 3.8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது. கொரோனாவினால் ஒரு மில்லியனுக்கு 34 பேர் வங்கதேசத்தில் உயிரிழந்துள்ளனர்.

சீனாவில் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 1.9 விழுக்காடு வளர்ச்சி அடையும் என கணக்கிடப்பட்டுள்ளது. அங்கு ஒரு மில்லியனுக்கு 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

வியட்னாமில் பொருளாதார வளர்ச்சி 1.6 விழுக்காடும் உயிரும். அங்கு  கொரோனா பாதிப்பினால் ஒரு மில்லியனுக்கு 0.4 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர். அதேபோல் நேபாளத்தில் பொருளாதார வளர்ச்சி 0.0. அங்கு கொரோனா பாதிப்பினால் மில்லியனுக்கு 25 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆனால், இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு ஒரு பில்லியன் மக்களில் 83 பேர் உயிரிழந்திருக்கின்றனர். நாட்டின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 10.33 விழுக்காடு வீழ்ச்சி அடையும் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.

இது தொடர்பான புள்ளி விவர படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள ராகுல்காந்தி, “பொருளாதாரத்தை வேகமாக முழுமையாக அழிப்பது எப்படி..? அதிகமான மக்களை கொரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாக்குவது எப்படி..?” என பாஜக அரசை கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *