‘முதலைகள் அப்பாவிகள்’: பிரதமர் மோடி கண்ணீர் குறித்து ராகுல் காந்தி விமர்சனம்

நாட்டில் கரோனா வைரஸால் உயிரிழப்பு அதிகரிப்பு, தடுப்பூசி பற்றாக்குறை, குறைந்த ஜிடிபி இருக்கும்போது பிரதமரின் பதி்ல் என்பது கண்ணீர்தான் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கரோனா வைரஸ் 2-வது அலையில் இதுவரை 400க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் உயிரிழந்துள்ளனர். கடந்த இரு நாட்களுக்கு வாரணாசியில் உள்ள சுகாதாரப் பணியாளர்களுடன் பிரதமர் மோடி உரையாடினார்.அப்போது ஏராளமான சுகதாரப் பணியாளர்கள் உயிரிழந்தது குறித்து பிரதமர் மோடி பேசும்போது தனது துக்கத்தை தாங்க முடியாமல் நெகிழ்ச்சியில் கண்ணீர்விட்டு பேசமுடியாமல் தவித்தார்.

இந்த சம்பவத்தைத்தான் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டல் செய்து ட்வி்ட்டரில் பதிவிட்டுள்ளார்.

மேலும், மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் கவுசிக் பாசு வெளியிட்ட உலக பொருளதாரச் சூழல் குறித்த அட்டவணையையும் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் இந்தியாவின் ஜிடிபி(மொத்த உள்நாட்டு உற்பத்தி) மைனஸ் 8 சதவீதமாக இருக்கிறது. வங்கதேசம் 3 சதவீதத்திலும், சீனா 1.9 சதவீதமும், பாகிஸ்தான் 0.4 சதவீதத்திலும் உள்ளன.

ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் இந்தியாவில் 212 பேர் கரோனாவில் உயிரிழக்கின்றனர். இது சீனாவில் 2 பேராகவும், வியட்நாமில் 0.4 சதவீதமாகவும் இருக்கிறது என்ற விவரத்தை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

இதைக் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ட்வி்ட்டரில் பதிவிட்ட கருத்தில் “ தடுப்பூசி இல்லை, குறைந்த அளவு ஜிடிபி, கோவி்ட்டால் அதிகரிக்கும் மரணங்கள், மத்திய அரசின் பதில் என்ன என்றால் பிரதமரின் அழுகை” என்று தெரிவித்துள்ளார். மற்றொரு ட்விட்டர் பதிவில், “ முதலைகள் அப்பாவிகள்” என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

மற்றொரு ட்விட்டர் பதில் ராகுல் காந்தி கூறுகையில் “ பிரதமர் மோடியின் தவறான நிர்வாக முறையால், கரோனா பெருந்தொற்றுடன் சேர்ந்து தற்போது பிளாக் ஃபங்கஸ் பெருந்தொற்றையும் இந்த தேசம் சந்திக்கிறது.

கரோனா வைரஸுக்கு மருந்துகள் பற்றாக்குறை இருப்பதோடு, இந்தியாவில் மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதே மிகப்பெரிய நோய். இந்த நோயை சரி செய்வதற்காக கைதட்டுங்கள், சாப்பாட்டு தட்டுகளில் தட்டி ஒலி எழுப்புங்கள் என்று பிரதமர் மோடி விரைவில் கூறுவார்” எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *