எண்ணெய் உற்பத்தியில் புதிய உச்சத்தை தொடும் ரஷ்யா

உலக அளவில் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த ரஷ்யா தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த சவுதி அரேபியாவை அது பின்னுக்குத்தள்ளி எண்ணெய் உற்பத்தி செய்யும் மிக முதன்மையான நாடாக ரஷ்யா மாறியுள்ளது.

உலக நாடுகளிடையே நடக்கும் மோதல்கள் அனைத்தும் எண்ணெய் உற்பத்தியை மையமாக வைத்தே என்பது நிதர்சனம். அந்த எண்ணெய் வியாபாரத்தில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகள் உலகின் வெற்றிகரமான நாடுகளாக கருதப்படுகிறது. அதேபோல் எண்ணெய் உற்பத்தி அதிகம் செய்யும் நாடுகள் எவையோ அவைகளே உலக நாடுகளில் பணக்கார நாடுகளாகவும் மாறியுள்ளன.

இத்தகைய சூழ்நிலையில் எண்ணெய் வணிகத்தில் ரஷ்யா தன்னை அது வல்லமை பொருந்திய நாடாக தன்னை மாற்றி நிரூபித்து காட்டியுள்ளது. மூன்றாம் இடத்திலிருந்த ரஷ்யா இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது மட்டுமில்லாமல், சவுதி அரேபியாவை இரண்டாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு தள்ளி உள்ளது.

ஆனால், எண்ணெய் உற்பத்தியை பொறுத்தவரை அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் சமீபத்தில் தரவுகளின் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாதங்களுக்கு முன்பு அதாவது 2020 ஜூன் மாதத்தில் ரஷ்யா ஒரு நாளைக்கு சுமார் 8 மில்லியன் பீப்பாய் எண்ணெய் உற்பத்தி செய்துள்ளதாகவும், சவுதி அரேபியாவின் எண்ணெய் உற்பத்தி ஒரு நாளைக்கு 7.5 மில்லியன் பீப்பாய்கள் என்றும் தரவுகள் தெரிவிக்கின்றன.

ஆனால், அமெரிக்கா நாளொன்றுக்கு சுமார் 150 மில்லியன் பீப்பாய்களை உற்பத்தி செய்து, நம்பர் ஒன் உற்பத்தி நாடு என்ற நிலையில் முதலிடத்தில் உள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் இருந்து ரஷ்யாவுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையேயான கச்சா எண்ணெய் விலை மீதான போர் தொடங்கியது. ரஷ்யா எண்ணெய் உற்பத்தியை குறைக்க வேண்டும் என்று சவுதி அரேபியா கோரி வந்தது. சர்வதேச சந்தையில் எண்ணெய் உற்பத்தியை நிறுத்தினால் மட்டுமே சர்வதேச அளவில் எண்ணெய் விலை வீழ்ச்சியை தடுக்க முடியும் என சவுதி அரேபியா கூறியது.

மேலும், ரஷ்யாவுக்கு சில நிபந்தனைகளையும் விதித்தது. ஆனால், ரஷ்யா எந்த நிபந்தனையை ஏற்க மறுத்து விட்டது. அதற்கு ஈடாக சவுதி அரேபியாவும் எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், எண்ணெய் விலையையும் தள்ளுபடி செய்ய வேண்டியது தற்போதைய சூழ்நிலையாக மாறியிருக்கிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *