மசூதி விழாவில் பங்­கேற்க மாட்­டேன் என்ற உ.பி முதல்­வர், மன்னிப்பு கேட்க வேண்டும் – சமாஜ்வாடி கட்சி வலியுறுத்தல்

அயோத்தியில் அமை­யவிருக்கும் மசூதி விழாவில் பங்­கேற்க மாட்­டேன் என்று உ.பி முதல்­வர் யோகி ஆதித்­ய­நாத் கூறியிருப்­பது சர்ச்சையை கிளப்­பியுள்­ளது. யோகி ஆதித்­ய­நாத் தன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அகி­லேஷ் யாதவ் தலை­மை­யிலான சமாஜ்­வாடி கட்சி வலியுறுத்­தியுள்­ளது.

கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்­றம் தீர்ப்­பளித்­தது. அதன்­படி அயோத்தியின் சர்ச்­சைக்குரிய பகுதியில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்­கப்­பட்டது. மேலும் அயோத்தியில் மற்­றொரு இடத்தில் மசூதி கட்ட 5 ஏக்­கர் நிலம் ஒதுக்­கவும், சன்னி வக்ப் வாரியம் அறக்­கட்­டளை மூலம் மசூதி கட்­டுமானத்தை நடத்­த­வும் நீதிமன்­றம் உத்­த­ரவிட்­டிருந்தது.

அதன்­படி, கடந்த ஆகஸ்டு 5-ந்தேதி அயோத்தி­யில் உள்ள ராம­ஜென்ம பூமி­யில் ராமர் கோவிலுக்­கான பூமி பூஜை விழா வெகு விமரி­சை­யாக நடந்­தது. இந்த விழாவில் பிர­த­மர் நரேந்திர மோடி, கலந்து கொண்டு அடிக்­கல் நாட்­டினார்.

இந்த விழாவில் கலந்து கொண்ட பின்­னர் தொலைக்­ காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்­டியில் உ.பி. முத­ல­வர் யோகி ஆதித்­ய­நாத் கூறிய­தா­வது:–
“ஒரு மாநிலத்தின் முதல்­வர் என்ற முறை­யில் எனக்கு பிறர் நம்பிக்கை மீதோ, மதத்­தின் மீதோ, குறிப்­பிட்டசமூ­கத்தினர் உடனோ எந்த பிரச்சி­னை­யும் இல்லை. அதே சமயம் ஒரு யோகியாக, அயோத்தியில் கட்­டப்­படும் மசூதியின் தொடக்க விழா­ வுக்கு நான் போக மாட்டேன். இந்து என்ற முறையில் ஆகம விதிகளின்­படி உகந்­ததை செய்யும் உரிமை எனக்கு உள்­ளது. மசூதி
விழாவுக்கு நான் எந்த விதத்­திலும் சம்­மந்­தப்­பட்­ட­வன் இல்லை. இஸ்­லா­மியர்­கள் என்னை மசூதி விழாவுக்கு அழைத்­தால் மதச்­சார்பின்­மைக்கு ஆபத்து வந்து விடும். அத­னால் நான் அழைக்­கப்­படவும்­ மாட்­டேன். அந்த நிகழ்வுக்கு போகவும் மாட்டேன். அதேசமயம் அரசின் திட்­டங்­கள்பார­பட்­ச￾மின்றி அனை­வ­ருக்­கும் கி டைக்க தொடர்ந்து பணி செய்­வேன். இப்­தார் நோன்பு நிகழ்வில் பிற மதத்தினர் தொப்பி அணி­வது போலியா­னது என்­பது அனை­வ­ருக்­கும் தெரியும். ராமர் கோவில் விஷயத்­தில் எந்த முடிவும் வந்து விடக் கூடாது என்று காங்­கிரஸ் நினைத்­தது. அதை வைத்து அரசியல் செய்ய நினைத்­தார்­கள்.” இவ்­வாறு அவர் கூறினார்.

யோகி ஆதித்­ய­நாத்தின் இந்தபேச்சு பெரும் சர்ச்­சையைக் கிளப்­பிய நிலை­யில் இது தொடர்­பாக கருத்து தெரிவிக்க காங்­கிரஸ் மறுத்து விட்­டது. அதேசமயம், அகி­லேஷ் தலைமை வகிக்கும் சமாஜ்­வாடி கட்சி கூறு­கையில், யோகி ஆதித்­ய­நாத் முதல்வராக பதவி ஏற்றபோது செய்தபத­விப்­பிரமா­ ணத்தை மீறி விட்­டார். அவர் இந்து சமூகத்திற்கு மட்­டுமே முதல்­வர் அல்ல. ஒரு மாநிலம் முழு­வ­தற்கும் முதல்­வர் என்­பதை நினை­வில் கொள்ளவேண்டும். மக்­கள் தொகை அள­வில் இந்து, முஸ்லிகள் எண்ணிக்கை மாறு­பட்­டா­லும், அனை­வ ருக்கும் உரிய மரியா­தையை அளிக்க அவர் தவறி விட்டார். அவ­ரது வார்த்­தை­கள் ஒருமைப்­பாட்­டுக்கு களங்கம் ஏற்­படுத்தி விட்­டது. பொறுப்­பற்ற பேச்­சுக்­காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்­வாறு  சமாஜ்­வாடி கட்சி கூறியுள்­ளது

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *