சாத்தான்குளம் தந்தை – மகன் கொலை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட 5 காவலர்களும் மதுரை சிறைக்கு மாற்றப்பட்டதன் பின்னணி என்ன..?

சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகியோர் சிபிசிஐடி காவல் துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அந்த 5 பேரும் மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

கோவில்பட்டியில் வைத்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றவாளிகளை மதுரை மத்திய சிறைக்கு மாற்றப்பட்டது ஏன்..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

பாதுகாப்பு காரணங்கள் கருதியே, அவர்கள் சிறை மாற்றம் செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால், அதைத் தாண்டி வேறு சில காரணங்கள் இருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

பேரூரணி மாவட்ட சிறை, புதிதாக கட்டப்பட்ட சிறைச்சாலை, அங்கு மரம், காற்றோட்டம் போன்ற சூழல் இல்லாமல், கான்கிரீட் சிறையாக இருக்கும். வசதியான சூழல் அங்கு இல்லை. மேலும், உணவும் சரியில்லை என கைது செய்யப்பட்ட காவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல், அச்சிறையில் இருக்கும் கைதிகளில், சாத்தான்குளம் காவலர்களால் கைது செய்யப்பட்டவர்களும் இருக்கின்றனர். தாங்கள் கைது செய்து அடைத்த குற்றவாளிகளுக்கு நடுவில் தாங்களும் கைதிகாளக இருப்பது அவர்களுக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

“போலீஸ்” என்ற கெத்துடன் வளம் வந்த உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், தான் கைது செய்த குற்றவாளிகளின் மத்தியில் இருக்கிறோமே என்பதை எண்ணி மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாவதாகவும், அவர் சிறைக்குள் நுழையும் போது மிகுந்த வேதனை அடைந்ததாக கூறப்படுகிறது.

முதலில் அருகில் இருக்கும் பாளையங்கோட்டை மத்திய சிறைக்கு மாற்றலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால், அங்கும் இதே நிலை அவர்களுக்கு ஏற்படும் என்பதால் தான் ஐந்து பேரும் மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *