இந்துத்வா கொள்கை இந்தியாவுக்கு எதிரி – சுவாமி அக்னிவேஷ்

மோடியும், அமித்ஷாவும் அரசியலமைப்புக்கும்,  ஆன்மிகத்துக்கும் எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள் என்று ஆரிய சமாஜ் அறிஞர் சுவாமி அக்னிவேஷ் குற்றம்சாட்டியிருக்கிறார்.

மேலும், என்னுடையை தலைப்பாகையை அணிவதால் இஸ்லாமியர் ஒருவர் இந்துவாகி விட முடியாது என ஆடை குறித்த பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்லாமியரின் குல்லா அணிந்து சிஏஏ – என்பிஆர் போராட்டத்தில் கலந்து கொண்டார் சுவாமி அக்னிவேஷ்  பதிலடி கொடுத்துள்ளார்.

பா.ஜ.க அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமைச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேநேரத்தில் சிஏஏ-க்கு ஆதரவு பொதுக்கூட்டங்களை பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினர் ஒருபுறம் நடத்தி வருகின்றனர்.

இருப்பினும், உரிமையை நிலைநாட்டவும், பாதுகாக்கவும் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் மக்கள்  தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்கள் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக தீர்மானமும்  நிறைவேற்றியுள்ளன.

இந்நிலையில், கடந்த வெள்ளியன்று (14/02/2020) கேரளாவின் கண்னூரில்  ’’அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் ’’ என்ற பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில்  பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று குடியுரிமை சட்டம், என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகியவற்றுக்கு எதிர்ப்பு  தெரிவித்தனர்.

இந்த பேரணியில், ஹரியானாவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஆரிய சமாஜ் அறிஞருமான சுவாமி அக்னிவேஷ் பங்கேற்று மக்கள் முன்னிலையில் சிறப்புரையாற்றினார். அப்போது அவர், மதச்சார்பின்மையை போற்றும் கேரளாவின் இந்த நிலைப்பாடு இந்தியாவுக்கே சிறந்த உதாரணம்  எனக் குறிப்பிட்டார். மேலும், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக தீர்மானம்  நிறைவேற்றியதற்காக கேரள அரசுக்கு வாழ்த்தும் தெரிவித்தார்.

முன்னதாக உடுத்தியிருக்கும் உடையை வைத்து  வன்முறை பரப்புவோரை காணலாம் என பிரதமர் மோடி அண்மையில் பேசியிருந்தார்.

மோடியின் அந்த பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், தன்னுடைய தலைப்பாகையை முஸ்லிம் லிக் தலைவர் மௌலவிக்கு அணிவித்து, அவருடைய தொப்பியை வாங்கி சுவாமி அக்னிவேஷ் அணிந்துகொண்டு பரஸ்பர அன்பை வெளிப்படுத்தினார்.

மேலும், “தொப்பி அணிவதால்  நான் முஸ்லிமாகவோ, தலைப்பாகை அணிவதால் அவர் இந்துவாகவோ மாறிவிடப் போவதில்லை. இதில் யார் வன்முறை செய்கிறார்  என்பதை நீங்களே நிரூபியுங்கள்..?” என பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பினார்.

மேலும், “பிரதமர் மோடியும், அமித்ஷாவும் அரசியலமைப்புக்கும்,  ஆன்மிகத்துக்கும் எதிரான நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறார்கள். இந்தியா அனைத்து  மதத்தினருக்குமான வாசலாக உள்ளது. இந்துத்வா கொள்கை  இந்தியாவுக்கு எதிரியாகும்” என சுவாமி அக்னிவேஷ் பேசியுள்ளார்.

சுவாமி அக்னிவேஷின் இந்த பேச்சுக் தற்போது இணையத்தில் பரவி வைரலாகி பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *