தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி இன்று தொடக்கம்

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் நடக்க உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தலுக்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. தேர்தல் ஆணையம் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியாளர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தேர்தலில் தவறு இல்லாத வாக்காளர் பட்டியல் அவசியம். எனவே, வாக்காளர் பட்டியல் திருத்தும் பணி தமிழகம் முழுவதும் இன்று தொடங்குகிறது. இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் 10:30 மணிக்கு சட்டமன்ற தொகுதி வாரியாக வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் அலுவலர்கள் வெளியிடுவார்கள்.

இன்று தொடங்கி டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும் மற்றும் முகவரி மாற்றம் உள்ளிட்டவைகளுக்கு விண்ணப்பிக்கலாம். பொதுமக்கள் வசதிக்காக இம்மாதம் 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும் டிசம்பர் மாதம் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.

பொதுமக்கள் அளிக்கும் விண்ணப்பங்கள் மீது ஜனவரி 5ஆம் தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து ஜனவரி 20ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *