இழி அரசியலை விட்டு விலகிக் கொள்கிறேன் : தமிழருவி மணியன் குமுறல்

மனுதர்ம நூலை தடை செய்ய வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி போராடி வருகிறது. அதன் தலைவர் திருமாவளவனுக்கு ஆதரவாக பெரியாரிய, இடதுசாரிய அமைப்புகள் மற்றும் தமிழ் அமைப்புகள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில்  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனை காந்திய மக்கள் இயக்க நிறுவனர் தமிழருவி மணியன் தரக்குறைவாக விமர்சனம் செய்தது போல ஒரு படம் இணைய தளங்களில் பரவியது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த தமிழருவி மணியன் இந்த இழி அரசியலை விட்டு விலகி கொள்கிறேன் என அறிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருமாவளவனை தாக்கி ஒரு தரக்குறைவான விமர்சனத்தை வெளியிட்டு அதன் கீழ் என் படத்தையும் எந்த மன நோயாளி போட்டிருக்கிறார் என்று தெரியவில்லை.

50 ஆண்டுகளுக்கு மேல் அரசியல் களத்தில் இயங்கும் நான் எந்த நிலையிலும் எவ்வளவு தவறான மனிதரையும் தனிப்பட்ட முறையில் தரம் தாழ்ந்து ஒரு வார்த்தையைக் கூடப் பேசியதுமில்லை; ஏன் இந்த அளவு பால் வெட்டு கிடைக்கின்றன என்று எனக்கு புரியவில்லை.

கழிப்பறை எழுத்துக்கள் விமர்சனம் என்ற பெயரில் பதிவேற்றம் செய்யப்படுவதும் யாரும் யாரையும் இழிந்த வார்த்தைகளில் கீழே இறங்கி விமர்சிக்கலாம் என்ற நிலை நாளுக்கு நாள் வளர்ந்து வருவதும் சமூக ஆரோக்கியத்தையே முற்றாக சிதைத்து விடும் என்ற அச்சம் என்னை அலைக்கழிக்கிறது.

வெறுப்புஅரசியல் எல்லை மீறி விட்ட நிலையில் இந்த இழிந்த அரசியல் களத்தை விட்டு முற்றாக விலகி விடுவது தான் நல்லது என்ற எண்ணம் என்னுள் எழுகிறது.

எந்த வகையிலும் மக்களுக்கு நன்மை தராத. சமூக நல்லிணக்கத்தை பாதிக்கிற ஒரு தேவையற்ற பிரச்சனையை ஏன் திருமாவளவன் ஊதி பெருநெருப்பாக அவளை தடுக்கிறார் என்று புரியவில்லை. இதற்குள் நுண்ணரசியல் இருக்கக்கூடும்.

ரஜினி அவர்கள் அரசியல் சார்ந்து செயல்படும் முறை எந்த ஊடகத்திலும் என் கருத்தை வெளிப்படுத்துவதில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். காந்திய மக்கள் இயக்க முகநூலில் என் கையொப்பத்துடன் இடம்பெறும் கருத்துகள் மட்டுமே என்னை சார்ந்தவை.

எந்த கேவலத்திலும் கீழே இறங்கி எவரையாவது பள்ளி தூற்ற வேண்டும் என்ற மன அரிப்பு என்னுள் என்றும் எழுந்ததில்லை. இழிந்த வாழ்க்கை வாழ்வதற்காக நான் அரசியலில் அடியெடுத்து வைக்க வில்லை”.

இவ்வாறு காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *