யூடியூபில் ஆயிரக்கணக்கில் டிஸ் லைக் வாங்கிய மோடி

இந்தியாவில் இது திருவிழா காலம் என்பதால் இந்த கால கட்டத்தில் கரோனா வைரஸ் பரவல் மேலும் தீவிரமாக கூடும் என்று நரேந்திர மோடி எச்சரித்த காணொலி சமூக ஊடகங்களில் பேசுபொருள் ஆகியுள்ளது.

நரேந்திர மோடி நேற்று மாலை இந்திய மக்களுக்கு உரையாற்றிய நிகழ்ச்சி பாஜகவின் அதிகாரப்பூர்வ யூடியூப் வலைதளப் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. அவர் பேசத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே 4 ஆயிரத்து 500 க்கும் அதிகமான டிஸ்லைக்குகளை அந்த காணொலி பெற்றது. இதன் காரணமாக அந்த காணொளியில் லைக் மற்றும் டிஸ்லைக் பட்டன்கள் அணைத்து வைக்கப்பட்டிருந்தன.

கொரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியில் ஜேஇஇ, நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்துவதற்கு எதிராக இதற்கு முன்பும் நரேந்திரமோடியின் உரைகள் பாஜகவின் யூடியூப் பக்கத்தில் லட்சக்கணக்கில் டிஸ்லைக் செய்யப்பட்டு வைரலானது.

அதேபோன்ற ஒரு நிலை தற்போதைய காணொலிக்கும் ஏற்படுவதற்கான வாய்ப்பும் இருக்கும் என்று கருதியோ என்னவோ கருத்து பதிவதற்கான பொத்தானும் பாஜகவின் வலைக்காட்சியில் நீக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *