பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு அரிசி பருப்பு வழங்க தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது. நோய்த் தொற்று தீவிரமாக உள்ள நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது முடிவெடுக்க முடியாது என்றும் வரும் டிசம்பர் 31ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் வாய்ப்பு இருக்காது என்றே தெரிகிறது.

இந்த நேரத்தில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவு திட்டத்தின் முட்டை மற்றும் நாப்கின் போன்ற பொருள்கள் மாணவர்களுக்கு முறையாக அளிக்க தமிழக அரசு பள்ளிகளுக்கு உத்தர விட்டது.

மேலும் தமிழகத்தில் இயல்பு நிலை திரும்பும் வரை உலர் உணவு திட்டத்தை தொடர தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொருட்களான அரிசி, பருப்பு தரப்படும் என்றும் கொரோனா அச்சுறுத்தலால் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளதால் சத்துணவு திட்ட மாணவர்களுக்கு இந்த அறிவிப்பை தமிழக அரசு தெரிவித்துள்ளது.

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *